Wednesday, April 11, 2012

எழுதப்படாத நடைமுறைகள்! - கவிதை மாதிரி



1
ஒவ்வொரு ரயில்பயணத்திலும் தவறாமல் கிடைத்துவிடுகின்றன புதிதாய் சில அறிமுகங்கள்

2
ஊருக்குச் செல்லும் புதுமணத் தம்பதிகளில் எடைகுறைந்த பையே(bag) மனைவியிடம் இருக்கிறது!

3
பேருந்து பயணத்தின் மூன்றுநபர் இருக்கையில் மூன்றாவதாக வரும் நபருக்கு, நடுவிலேயே இடமளிக்கப்படுகிறது!

4
குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்லும்போதுதான் உணரத்துவங்குகிறோம் நமக்கு தெரிந்தது குறைவு தெரியாதது அதிகம் என்பதை!

5)

நேரம் கிடைக்கும்போது பேசிக்கொள்கிறார்கள் நண்பர்கள், பேசுவதற்காகவே நேரம் எடுத்துக்கொள்கிறார்கள் காதலர்கள்!
                                      
                                              --நம்பிக்கைபாண்டியன்

9 comments:

செய்தாலி said...

எல்லாம் யதார்த்தமான விஷயங்கள்

அருணா செல்வம் said...

எழுதப்படாத நடைமுறைகளை எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

சசிகலா said...

புது மாதிரி .

Yaathoramani.blogspot.com said...

நிஜம் சொல்லும் கவிதைகள்
தொடர வாழ்த்துக்கள்

ஹேமா said...

வித்தியாசமான மாதிரிக் கவிதைகள் !

Unknown said...

//பேருந்து பயணத்தின் மூன்றுநபர் இருக்கையில் மூன்றாவதாக வரும் நபருக்கு, நடுவிலேயே இடமளிக்கப்படுகிறது!// இது நிச்சயம் கவிதைதான் நண்பா.. அதுவும் அருமையாக இருக்கிறது..

மாலதி said...

மிகவும் சரியாகவே கணிக்கின்றிர்கள் நல்ல கணியனோ ? (சோதிடர் ) தமிழர்கள் எல்லோருமே இப்படித்தான் இருப்பார்கள் என பட்டியல் இடுகிறீர்கள் பாராட்டுகள்.

இராஜராஜேஸ்வரி said...

குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்லும்போதுதான் உணரத்துவங்குகிறோம் நமக்கு தெரிந்தது குறைவு தெரியாதது அதிகம் என்பதை!

மறுக்கமுடியாத உண்மை!!

Athisaya said...

நேரம் கிடைக்கும்போது பேசிக்கொள்கிறார்கள் நண்பர்கள், பேசுவதற்காகவே நேரம் எடுத்துக்கொள்கிறார்கள் காதலர்கள்!.........