கபீஷ் கவிதைகள்
1
தொட்டிலில் தூங்கும்போது
அவ்வப்போது அழுது சிணுங்கி
அருகினில் யாரேனும்
இருப்பதை உறுதி செய்து கொண்டு
தொடர்ந்து தூங்குகின்றன குழந்தைகள்!
2
தூக்கம், வலி ,பசி, என
தன் தேவைகள் அனைத்தையும்
"அழுகை" எனும்
ஒற்றை மொழியில்
சொல்லிவிடுகின்றன குழந்தைகள்!
3
இத்தனை வருடங்களாய்
நான் தூங்கும் நேரங்களை
நானே தீர்மானித்தேன்- இப்போதெல்லாம்
என் குழந்தை தீர்மானிக்கிறது by அம்மா!
4
பொம்மைகளுடன்
விளையாடும்போது
அதன் விலைகளைப் பற்றியெல்லாம்
கவலைப்படுவதில்லை குழந்தைகள்!
(எனது மகன் கபீஷ்வர் எனக்கு பரிசளித்த கவிதைகள் இவை!)