காத்திருப்பு!
கவிதை வடிவில் குட்டி கதை,
(திருமணத்திற்க்கு காத்திருக்கும் ஒரு முதிர்கன்னியின் நிலை)
1)
குடி போதையில்
வீடு திரும்பாத அப்பா
கட்டுப்பாடின்றி!
காதலியுடன்
ஊர் சுற்றும் தம்பி!
தொலைக்காட்சி நாடகங்களிலும்!
ஊர்க்கதை பேசுவதிலும்
மூழ்கிப் போன அம்மா!
இவர்கள் சொல்கிறார்கள்
நான் அடக்கமாக
இருக்க வேண்டுமாம்!
கோபத்துடன் கொஞ்சம்
சிரிப்பும் வருகிறது!
பருவங்கள் தவறுவதால்
தனிமையை தவிர்க்கிறேன்!
கனவுகளை சொல்ல
வழியின்றி தவிக்கிறேன்!
அம்மாவிடம் சொன்னால்
ஆவேசமாய் திட்டுவாள்!
தோழியிடம் சொன்னால்
ஏளனமாய் சிரிப்பாள்!
இறைவா!
கல்யாணத்திற்குப் பிறகுதான்!
காதலும்! காமமும்!
உணர்வுக்கு வருமென்று!
எல்லோரையும் படைத்திருந்தாள்
நிறைய பேரின் வாழ்க்கை!
நிம்மதியாக இருந்திருக்குமே!
தப்பிக்கவும் வழியில்லை!
தவறு செய்யவும் மனமில்லை!
எப்போது கிடைக்கும் மணமாலை!
அப்போதுதான் இதில் விடுதலை!
தகுதியானவர்களுக்கு
தகுதியானது கிடைக்கும்!
என்ற நம்பிக்கையில்!
இன்னும் காத்திருக்கிறேன்!
என்னைக் கரம் பிடிக்கும்
நல்ல கணவனுக்காக!
(அவளின் நல்ல மனம் போலவே அவளுக்கு நல்ல கணவன் கிடைத்தான்!. திருமணமாகி பல வருடங்களுக்குப் பின்னாலும்! மாறாத அன்புடன்! அவன் தன் மனைவிக்காக! எழுதிய கவிதை.)
அன்பு
கிடைக்கும்போது !
அதில் என் அன்னையை
உணர்ந்தேன் !
அக்கறை
கிடைக்கும்போது!
அதில் என் தந்தையை
உணர்ந்தேன்
அறிவு
கிடைக்கும்போது !
அதில் என் ஆசானை
உணர்ந்தேன்!
என் கவலைகள்
தீரும்போது! அதில்
கடவுளின் அருளை
உணர்ந்தேன்!
உற்சாகம்
கிடைக்கும் போது !
அதில் என் நட்பை
உணர்ந்தேன்!
இவை அனைத்தும்
ஒன்றாய் சேர்ந்து
கிடைக்கும் போது
என் மனைவியே!
அதில் உன்னை
உணர்ந்தேன்!
(அவன் மேல் குறையாத அன்பு கொண்ட அவள்! தன் கணவனுக்காக சொன்ன கவிதை)
ஒவ்வொரு
காத்திருப்பிலும்!
ஒரு அர்த்தம்
இருக்குமென்று!
புத்தகங்களில் படித்தபோது!
அதன் உண்மையை
உணரவில்லை!
உன்னை கணவனாக
அடைந்தபின்தான்!
தேடி வந்த
காதலை எல்லாம்!
மறுத்துக் காத்திருந்ததன்
அர்த்தத்தை உணர்ந்தேன்!
(இறுதிக்காலம் வரை இதே அன்புடன் வாழ்ந்தார்கள்)
நட்புடன்
நம்பிக்கைபாண்டியன்