நம் நட்பு
"இவ்வளவு நேரம்
சிரிச்சு சிரிச்சு
அவளிடம் என்னடா
பேச்சு வேண்டியிருக்கு!"என்று
திட்டிய என் அம்மா!
"இனி அவனிடம்
பேசுறத பார்த்தா
அடிச்சே கொன்னுடுவேன்!"என்று
கோபித்த உன் அப்பா!
"காதல் மட்டுமா!
கல்யாணம் வரைக்குமா!"என
கேலி பேசிய என் நண்பர்கள!
"ஜோடிப் பொருத்தம்
நல்லா இருக்குடி"என
கிண்டலடித்த உன் தோழிகள்!
இவர்கள்
யாருக்குமே தெரியாது !
நம் நட்பான பேச்சில்
வார்த்தைகள் கூட
எல்லை மீறியதில்லை என்பது!
யாருக்குமே தெரியாது !
நம் நட்பான பேச்சில்
வார்த்தைகள் கூட
எல்லை மீறியதில்லை என்பது!
3 comments:
அருமையான கவிதை. மக்கள் மனதில் அழுக்கால் அவர்களுடைய பார்வையும் அழுக்கடைந்துவிடுகிறது என்பதை அழகாக சொன்னீர்கள் - மோகன்.
நட்பை பற்றி இந்த நட்பு பாண்டியனால் மட்டுமே அழகா சொல்ல முடிகிறது..
நன்றாக இருக்கிறது நண்பா.. உன் நட்பு வலை தொடரட்டும்...
என்றும் நட்புடன்
பரமேஸ்வரி..
பராட்டுக்களுக்கு நன்றிங்க மோகன், இன்னொரு உண்மை சில நேரங்களில் நானும் சில நல்ல நண்பர்களை ஒருவேளை இப்படி பார்த்திருக்கலாம்,
நட்பு பாண்டியனா, அட! பேர் நல்ல இருக்குப்பா, நன்றி பரமேஸ்வரி
Post a Comment