Thursday, February 14, 2013

ஊருக்குச்சென்றவள் (மனைவி) -காதல் கவிதைகள்





நீ
ஊருக்குச்சென்ற‌
நாளொன்றில்
உனக்கான முத்தங்கள்
அனைத்தையும் வாங்கி
சிரித்துக்கொன்டிருக்கிறது !
வீட்டிலிருக்கும்
 உன் புகைப்படம்!
                 *
நேரத்தில் சாப்பிடு
நேரத்தில் தூங்கு" என‌
எளிதில் சொல்லிவிடுகிறாய்
தொலைபேசியின் வழியே
நிச்சயம் முடிவதில்லை
 நீ இல்லாத நாட்களில்!
                 *
நீ அருகிலிருந்து கொடுக்கும்
நூறு முத்தங்களின் மகிழ்ச்சியை!
தொலைபேசி பேச்சின்
முடிவில் கொடுக்கும்
ஒற்றை முத்தம்
கொடுத்துவிடுகிறது
                  *
நீ அருகிலிருந்து
ஓயாது பேசிக்கொண்டிருந்த நாட்களிலும்
அமைதியான வீடாக உணர்ந்து
எளிதில் தூங்கிவிடுகிறேன்!
நீ ஊருக்குச்சென்ற நாட்களில்
தனிமையில் இருந்தாலும்
இரைச்சல் நிறைந்த வீடாக உணர்ந்து
தூக்கமின்றி தவிக்கிறேன்!


10 comments:

Dinesh Kumar A P said...

Super kavithai எண்ணங்கள் அழகானால்...ஹைக்கூ கவிதைகள்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அத்தனையும் ரசிக்கும்படி இருக்கிறது....

அழகிய கவிதை அருவி...

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா... என்னவொரு ரசனை...!

Seeni said...

arumai sako...!

சுG said...

தனிமையில் இருந்தாலும்
இரைச்சல் நிறைந்த வீடாக உணர்ந்து
தூக்கமின்றி தவிக்கிறேன்!
supeer

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_27.html) சென்று பார்க்கவும்... நன்றி...

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...

cheena (சீனா) said...

அன்பின் நம்பிக்கை பாண்டியன்காதல் கவிதை அருமை - இரசித்தேன் - மகிழ்ந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் நம்பிக்கை பாண்டியன் - ஏன் இப்பொழுதெல்லாம் எழுதுவதில்லைஉ ? தொடர்ந்து எழுதுக - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Unknown said...

மிகவும் அருமையான வரிகள் பாண்டியன் சகோ.,
தொலைபேசி பேச்சின் முடிவில் கொடுக்கும் ஒற்றை முத்தம்.

Bala said...

Super