கபீஷ் கவிதைகள்
1
தொட்டிலில் தூங்கும்போது
அவ்வப்போது அழுது சிணுங்கி
அருகினில் யாரேனும்
இருப்பதை உறுதி செய்து கொண்டு
தொடர்ந்து தூங்குகின்றன குழந்தைகள்!
2
தூக்கம், வலி ,பசி, என
தன் தேவைகள் அனைத்தையும்
"அழுகை" எனும்
ஒற்றை மொழியில்
சொல்லிவிடுகின்றன குழந்தைகள்!
3
இத்தனை வருடங்களாய்
நான் தூங்கும் நேரங்களை
நானே தீர்மானித்தேன்- இப்போதெல்லாம்
என் குழந்தை தீர்மானிக்கிறது by அம்மா!
4
பொம்மைகளுடன்
விளையாடும்போது
அதன் விலைகளைப் பற்றியெல்லாம்
கவலைப்படுவதில்லை குழந்தைகள்!
(எனது மகன் கபீஷ்வர் எனக்கு பரிசளித்த கவிதைகள் இவை!)
5 comments:
அழகு..
மனதை கவரும் படங்களுடன் கவி வரிகள்... வாழ்த்துக்கள்...
கபீஷ் தந்த கவிதைகள் சிறப்பு! வாழ்த்துக்கள்!
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-4-part2.html) சென்று பார்க்கவும்... நன்றி...
மனவியல் படி, பிறந்த ஒரு சிசுவுக்கு
ஏற்படும் இரண்டு உபாதைகள்
ஒன்று பசி இன்னொன்று வலி.
அதை அன்னையிடம் எடுத்துச்சொல்ல
ஆண்டவன் அளித்த அற்புத பரிசு.
அழுகை.
அந்த அழுகை அதிர்வையும் தரும்.
ஆனந்தத்தையும் தரும்.
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com
Post a Comment