ஒரு உயிர் பிரிந்ததற்கான
எவ்வித வருத்தங்களுமற்று
எப்போதும்போலவே இருந்தது வீடு!
"டி.வி யில் மூழ்கியிருந்த மகள்
வாசலில் விளையாடும் மகன்
தண்ணீர் பிடிக்கும் மனைவி
சமைத்துக் கொண்டிருந்த அம்மா
செய்தித்தாள் வாசிக்கும்அப்பா!" என
யாருக்கும் அக்கறை இல்லை
என்று புலம்பியபடி
நானே எடுத்து
வெளியில் எறிந்தேன்
வீட்டிற்குள்
இறந்துகிடந்த எலியை!
எவ்வித வருத்தங்களுமற்று
எப்போதும்போலவே இருந்தது வீடு!
"டி.வி யில் மூழ்கியிருந்த மகள்
வாசலில் விளையாடும் மகன்
தண்ணீர் பிடிக்கும் மனைவி
சமைத்துக் கொண்டிருந்த அம்மா
செய்தித்தாள் வாசிக்கும்அப்பா!" என
யாருக்கும் அக்கறை இல்லை
என்று புலம்பியபடி
நானே எடுத்து
வெளியில் எறிந்தேன்
வீட்டிற்குள்
இறந்துகிடந்த எலியை!