Saturday, December 09, 2006

காதல் குறும்புகள்!
(தேன் கூடு இணைய தளத்தின் போட்டிக்கான படைப்பு(குறும்பு)

உன் விழிகளின்
பார்வை குறும்புகளால் என்னிலும்!
என் பேச்சின்
நகைச்சுவை குறும்புகளால் உன்னிலும்!

ஏற்பட்ட ஈர்ப்பின் விளைவாய்

நம்மில் அரும்பியது காதல்!

எத்தனையோ நாட்கள்
எத்தனையோ விதமான
வார்த்தைக் குறும்புகளால்
ஒருவரை ஒருவர்
வசீகரித்திருக்கிறோம்!
வசை பாடியிருக்கிறோம்!
அத்தனையும் நினைவில்
அழியாமல் நிற்கிறது!

ஒருநாள் நான் உன்னை
"தேவ‌தை" என்று‌ வ‌ர்ணித்துவிட‌!
ம‌றுநாள் வ‌ந்து
"நேற்று என்னை தேவதை என்று சொல்லி
தூங்க‌ விடாம‌ல் செய்து விட்டாய்!"என்று,
நீ மகிழ்ச்சியுட‌ன் சொன்ன‌போது!

"உன்னை அப்ப‌டி தவறாக வ‌ர்ணித்த‌ற்காக‌
நானும்தான் தூங்க‌வில்லை" என்றேன்!
"என்ன‌ உள‌ருகிறாய் "என்று
கோப‌த்துட‌ன் புரியாம‌ல் கேட்டாய்!

"ஆமாம்! நீ ஒன்றும் தேவ‌தை அல்ல‌!
தேவ‌தைகள் சிறகுகள் விரித்தால்தான் அழ‌கு
ஆனால் நீயோ சிரித்தாலே அழ‌கு!

தேவ‌தைக‌ளின் பாத‌ம் பூமியில் படாதாம்!
கடினமான பூமியில் உன் மெல்லிய பாதங்கள்
பதிந்து ந‌டந்து வரும்போதுதானே நீ இன்னும் அழகு!

தேவ‌தைகளின் க‌ண்க‌ள் இமைப்ப‌தில்லையாம்!
அவ்வப்போது மேலும் கீழும் பட படவென
அடித்துக் கொண்டு அதை பார்க்கும் என் இதயத்துடிப்பை
அதிகரிக்கும் உன் இமைப்பார்வை கொள்ளை அழகு!

தேவ‌தைக‌ள் தங்க‌ளின் இத‌ய‌த்தில் பாரபட்சமின்றி
எல்லோரையும் ச‌ம‌மாக‌வே நினைப்பார்க‌ளாம்!
நீ! என்னை, உன் இத‌ய‌த்தில்
காத‌ல் என்னும் அன்பின் உய‌ர‌த்தில் அம‌ர்த்தியிருக்கிறாயே!
அத‌னால்தான் சொன்னேன் நீ தேவ‌தை அல்ல!" என்ற‌தும்!

"போடா!உன் குறும்பு பேச்சால்
இன்றும் என்னை தூங்க‌விடாம‌ல் செய்து விட்டாய்" என்ற‌வ‌ளே!

இன்னொருநாள்


உன் கோபத்தை ரசிப்பதற்காக!
உன்னைப்போல ஒரு முட்டாளை
நான் பார்த்ததே இல்லை! என்று
நான் குறும்பாய் சொன்னபோது!
கோபப்படாமல் சிரித்துக்கொண்டே!



அதனால் தானடா!
உன்னை காதலித்திருக்கிறேன் என்று
குறும்பாக பதில் சொல்லி
உன் புன்னகையை ரசிக்கவைத்தவளே!

மற்றொருநாள்!


சாப்பிடும் பொழுது
"இவ்வளவு கொஞ்சமாக சாப்பிட்டு!
எப்படி உங்களால்
இப்படி குண்டாக இருக்க முடிகிறது"என்று
நான் குறும்பாய் கேட்டதும்,
"பெண்ணாய் பிறந்து பார்!
அப்போது தெரியும்" என்றவளே!


நீ ஆணாகா பிறந்து
என்னை காதலிப்பாயென்றால்!
நான் பெண்ணாய் பிறக்க
சம்மதிக்கிறேன்! என்றதும்
உன் மகிழ்ச்சிக் கண்ணீரால்
குறும்பை மறைத்து
அன்பை நிறைத்தவளே!

எல்லை மீறாத!
ந‌ம் காத‌ல் குறும்புக‌ள்!
விரைவில் எல்லைக‌ள‌ற்ற‌
க‌ல்யாண‌ குறும்புக‌ளாய் மாற‌ட்டும்!
அதை‌யே உல‌க‌ம் பாராட்டும்!

~ந‌ம்பிக்கை பாண்டிய‌ன்

2 comments:

ஜி said...

சூப்பர்.

நான்கூட காதல் குறும்புகள்ன உடனே, காதலி காதலனுக்கு கல்தா குடுத்தக் கதையாக்கும்னு நெனச்சிட்டேன். அருமை. வெற்றிபெற வாழ்த்துக்கள்.

அகமது சுபைர் said...

இத குங்குமம் இல்லைன்னா குமுதம் புத்தகத்தில இந்த வாரம் தான் படிச்சேன்.

ரொம்ப நல்லாயிருக்கு.