Tuesday, October 18, 2011

நீ படித்த கவிதைகள்! - படக்கவிதை

1

எழுதத் தொடங்கும்போதே
எண்ணிக் கொள்கிறேன்
படித்துவிட்டு
நீ பாராட்டுவதாக
மேலும் மேலும்
அழகாகின்றன கவிதைகள்!

2

நீ என்ன சொன்னாலும்
அதை நம்பிவிடும் என்னை
ஏமாளி என்கிறாய்!

நான் என்ன சொன்னாலும்
அதை நம்பிவிடும் உன்னை
குழந்தையாகவே என்னுகிறேன்!



3

என் கவிதையை
படித்துவிட்டு
அதில் ஏதோ ஒன்று
குறைகிறதே என்கிறாய்!

ஒருவேளை அது
என் பெயருக்கு 
பின்னால் சேர்க்கப்படாத
உன் பெயராக கூட இருக்கலாம்!






6 comments:

அம்பாளடியாள் said...

எண்ணத்தின் வெளிப்பாட்டை மிக அழகாகக் கவிதை வரிகளால்தொடுத்தவிதம் அருமை !........வாழ்த்துக்கள் .
மிக்க நன்றி பகிர்வுக்கு ......

SURYAJEEVA said...

http://maayaulagam-4u.blogspot.com/2011/10/follower-widget.html

நம்பிக்கைபாண்டியன் said...

அம்பாளடியாள் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி!

சூர்யஜீவா,பலே பிரபு மடலிட்டார் சுலமாகவே இருந்தது இணைத்துவிட்டேன்!நன்றி

சிவகுமாரன் said...

அட போட வைக்கும் கவிதைகள் வெகு அழகு.

நம்பிக்கைபாண்டியன் said...

நன்றி சிவக்குமரன்

Unknown said...

///எழுதத் தொடங்கும்போதே
எண்ணிக் கொள்கிறேன்
படித்துவிட்டு
நீ பாராட்டுவதாக
மேலும் மேலும்
அழகாகின்றன கவிதைகள்!///

கவிதை எழுதுவது நீயல்லவோ!
அதனால் தான் என்னவோ என்னுயிரே...
கவிதை நன்று ...

சகோதிரி சாகம்பரி ஆற்றுபடுத்தியதால் இவ்விடம் வந்தேன்... நன்றி!