இது கதையுமல்ல கவிதையுமல்ல,
ஒரு நிகழ்வு!!
ஒருநாள்
மாலை நேரத்திலே!
இளையராஜாவின் இசையினிலே!
இதயம் வருடும் பாடல்களை!
சுவற்றில் சாய்ந்து கண்கள் மூடி!
இதமாய் ரசித்து அமர்ந்திருந்தேன்!
கழுத்தில் ஏதோ சுருக்கென்றது!
திரும்பிப் பார்த்தால்!
எறும்பின் வரிசை!
நாளைய தேவைக்கு!
இன்றே இரை தேடி!
சீரான வரிசையில் சிறப்புடனே!
சுறு சுறுப்பாக
இயங்கிக்கொண்டிருந்தது!
எறும்பிடம் பாடம் கற்கலாமென்று்!
பள்ளிப் பாடத்திலும்!
அறிஞர்கள் பலரின்
கருத்திலும் கவிதையிலும்
அறிந்திருக்கிறேன்!
எத்தனை உயர்ந்த சுறு சுறுப்பு!
எதிர்கால தேவைக்கு சேமிப்பு!
இனிப்பில் மண் கலந்திருந்தாலும் ,
இனிப்பை மட்டும் பிரித்தெடுக்கும்!
இஷ்டப்படி இயங்காமல்!
சீராய் செல்லும் அதன் பாதையிலே!
இப்படி நிறைய நன்மைகளை
முன்பே அதனிடம் கற்றிருந்தாலும்!
புதிதாய் கற்க்கும் ஆர்வத்தில்!
தடையற்ற அதன் பாதையிலே!
தடைகள் போல
என் விரல் வைத்தேன்!
பிரச்சனையற்ற அதன் பயணத்திலே!
பிரச்சனையாக இப்போது
என விரல்கள்!
வரிசைப்பயணம் தடை பட்டதால்!
வழி தெரியாத எறும்பெல்லாம்
தாறு மாறாய்ச் சிதறியது!
அவற்றில் சில எறும்புகளோ!
என் விரலைக் கண்டு
மிரண்டு பயந்து!
தொடர்ந்து முன்னேறிச் செல்லாமல்!
வந்த வழியே திரும்பியது!
இன்னும் சிற்சில எறும்புகளோ!
என் விரலை விட்டு விலகிச் சென்று
சுற்றி வளைந்து மறுபுறம் சென்று!
மீண்டும் பயணத்தை தொடங்கியது!
இன்னும் சிற்சில எறும்புகளோ!
என் விரலின் தடைய
எளிதென எண்ணி! ஒருபுறம் ஏறி
மறுபுறம் இறங்கி இனிதாய்
பயணத்தை தொடங்கியது!
இன்னும் சிற்சில எறும்புகளோ!
என் விரலை தடையென கருதாமல்!
தைரியமாய் ஏறி நருக்கென்று கடித்ததும் !
வலி தாங்காமல் விருட்டென்று
விரல்களை இழுத்துக் கொண்டேன்!
இவ்வளவு சிறிய எறும்புகளுக்குள்!
இத்தனை பல குணங்களா!!
அழகாய் அறிவு உணர்த்தியது!
நம்மிலும் இது போல் பலர் உண்டு!
வாழ்வின் நல்ல முயற்சிகளை
பிரச்சனைகளுக்கு பயந்து தொடராமல்!
திரும்பி விடுபவர்கள்!
பிரச்சனைகளை விட்டு விலகிச் சென்று
அமைதியாய் இருந்து உயர்பவர்கள்!
பிரச்சனைகளை எளிதென நினைத்து!
சமாளித்து சாதிப்பவர்கள்!
பிரச்சனைகளுக்கே
பிரச்சனைகளை கொடுத்து!
எதிர்த்து நின்று வெற்றி பெறுபவர்கள்!
அற்புதமான பாடம் தந்த
எறும்புகளுக்கு நன்றி சொல்லி!
இமைகள் மூடி இசையில் கலந்தேன்!
~நம்பிக்கை பாண்டியன
4 comments:
ஆஹா !!அற்புதமான கவிதை படைத்திருக்கும் உன்னை எப்படிப் பாராட்டுவது!
இந்த இனிய நன்னாளில் புதிய வலைப்பதிவை தொடங்கியதும் அல்லாமல், நல்ல கவிதையையும், அன்னையின் அறிவுரைகளையும் அழகாக வடித்திருக்கிறீர்கள்.
வலைப்பதிவுலகில் பெருமையுடன் சிறக்கவும், வெற்றியடையவும், சிறந்த படைப்பாளியாக உருவாகவும் வாழ்த்துக்கள்.
நம்பிக்கையான பதிவு.
All the best pa.. Thamizh comments coming soon.....
இவ்வளவு சிறிய எறும்புகளுக்குள்!
இத்தனை பல குணங்களா!!
அழகாய் அறிவு உணர்த்தியது!
நம்மிலும் இது போல் பலர் உண்டு!
வாழ்வின் நல்ல முயற்சிகளை
பிரச்சனைகளுக்கு பயந்து தொடராமல்!
திரும்பி விடுபவர்கள்!
அற்புதமான கவிதை
Post a Comment