மனசாட்சி
தவறுகளை
சரி! என்று சொல்லி
மேலும் மேலும்
செய்யும் மனமும்!
இதெல்லாம்
ஒரு தவறா?
எனச் சொல்லி
தன் தவறுகளை
நியாயப்படுத்தும்
உதடுகளும்!
நான் மட்டுமா
செய்கிறேன்,
நிறைய பேர்
செய்கிறார்களே! என
குற்ற உணர்விலிருந்து
தப்பிக்க
தனக்கு தானே
ஆறுதல் தேடும் அறிவும்
கடவுளின் முன்
கைகூப்பிய பிரார்த்தனையில்
தவறுகளுக்காக
மன்னிப்பு கேட்க
மறப்பதில்லை!
~நம்பிக்கை பாண்டியன்
No comments:
Post a Comment