அழகிய காதல்!
காதலியே!
உன் பிறந்தநாளன்று
அழகு நிலையத்தில்
உன் முகத்தை
அழகுபடுத்தி வந்து
நான் அழகாய்
இருக்கிறேனா? என்றாய்
அழகாய் இல்லை!ஆனால்
பளிச்சென்று இருக்கிறாய்! என்றேன்,
புன்னகையாய் பார்த்துவிட்டு,
புதிய சுரிதார்
உடுத்திவந்து
இப்போது அழகாய்
இருகிறேனா? என்றாய்,
அழகாய் இல்லை ஆனால்
அருமையாக இருக்கிறாய்! என்றேன்,
அமைதியாய் பார்த்துவிட்டு,
பாவாடை தாவணி
உடுத்திவந்து
இப்போது அழகாய்
இருக்கிறேனா? என்றாய்,
அழகாய் இல்லை
ஆனால்அற்புதமாக இருக்கிறாய்! என்றேன்,
சலிப்பாய் பார்த்துவிட்டு,
ஜீன்ஸ்,டி.சர்ட்
உடுத்திவந்து
இப்போது அழகாய்
இருக்கிறேனா? என்றாய்,
அழகாய் இல்லை ஆனால்
கவர்ச்சியாக இருக்கிறாய்! என்றேன்,
முறைத்து பார்த்துவிட்டு,
பட்டுச்சேலை
உடுத்திவந்து
இப்போது அழகாய்
இருக்கிறேனா? என்றாய்
அழகாய் இல்லை ஆனால்
மங்களகரமாக இருக்கிறாய்! என்றேன்,
வெறுப்பாய் பார்த்துவிட்டு,
உடல் முழுவதும்
தங்கஆபரணங்களை
அணிந்துவந்து
இப்போது அழகாய்
இருக்கிறேனா? என்றாய்
அழகாய் இல்லை ஆனால்
அலங்காரமாய் இருக்கிறாய்! என்றேன்,
குழப்பமாய் பார்த்துவிட்டு,
எப்போதுதான்
அழகாய் இருப்பேன்
நீயே சொல்லேன்!என்றாய்
அடி என் இனியவளே!
நீ! அன்பும்
அக்கறையும் செலுத்தும்
ஒவ்வொரு நிமிடமும்
அழகுதானடி!
அழகு
தோற்றத்திலா இருக்கிறது
வாழும்
முறையில்தானே இருக்கிறது!
என்றும்எனக்கு
நீ பேரழகிதான்!என்றதும்
அழகை மறந்து
அன்பாய் சிரித்தாய்
இது மிகவும் அழகு!!
--நம்பிக்கைபாண்டியன்
No comments:
Post a Comment