Friday, July 18, 2008

கோவை வலைப்பதிவு & குழும நண்பர்கள் சந்திப்பு

கோவை சந்திப்புக்கு செல்வதற்கு அதிகாலை 5 மணிக்கே எழுந்து 6 மணிக்கெல்லாம் பஸ் பிடித்து மஞ்சூர் அண்ணாவின் வீட்டிற்கு செல்லும்போது நேரம் சரியாக நண்பகல் 12 மணி, சற்று முன்புதான் சுப்பையா ஐயாவின் பேச்சு அலை ஓய்ந்ததாக பேசிக்கொண்டார்கள்,என்னை அறிமுகம் செய்துகொண்டேன்,மற்றவர்களின் அறிமுக ப‌டலம் முன்பே முடிந்திருந்ததால் தமிழ்பயணி சிவா மற்றவர்களை அறிமுகம் செய்தார்.
பிறகு லதானந்த் அவர்கள் பேசினார், கொஞ்ச‌ம் நகைச்சுவையாகவும் யதார்த்தமாகவும் பேசினார், அவரின் பத்திரிகை படைப்புகள் அதனால் வந்த பிரச்சனைகள் பற்றியும் குறிப்பிட்டார், ஒரு நாளில் 15 ப‌திவுகள் கூட தன்னால் எழுத முடியும் என்று சொன்ன போது என்னால் ஆச்சர்யம் தாங்க முடியவில்லை!படிப்பவர்களுக்கு ஒரு ரிலாக்ஸா இருக்கும்படியே தான் எழுத விரும்புவதாகவும் தெரிவித்தார்,

இடையிடையே ஞானவெட்டியான் ஐயா, பல அரிய‌ நூல்களை மொழிபெயர்ப்பதாகவும் சொல்லி அதில் உள்ள பல நல்ல கருத்துக்களை குறிப்பிட்டார்,அவரது குரலும் பேசும் உச்சரிப்பும் அருமையாக இருந்தது!பதிவுகளில் ஒரு கருத்தை சொன்னால் அதில் வரிக்கு வரி ஆதாரம் கேட்டு விவாதிப்பது சரியானது அல்ல என்றார்

நண்பர் ஸ்ரீ( பால் ஜோசப்) தமிழஅமுதம் என்ற தமிழ்விக்கிபீடியா முயற்சி பற்றி தெரிவித்தார்,அதற்கு ஓசை செல்லா போன்றவ‌ர்கள் தங்கள் அனுபவங்களினை கூறி அது எதிர்பார்க்கும் அளவுக்கு வெற்றிபெறாது என்றனர் அதுபற்றி விவாதம் நடந்தது, கடைசியா தனித்துவம் வாய்ந்த கருத்துக்களுக்கு விக்கிபீடியா போன்ற தளங்கள் உகந்தது அல்ல ! பொதுத்துவமான கருத்துகளுக்கு அவைகள் சிறந்ததாக இருக்கும்,என்ற கருத்துடன் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.


.tk க் பற்றி விவாதிக்கப்ட்டது பலரும் பலவிதமான டெக்னிக்கல் கருத்துக்களை சொல்லி விவாதித்துகொண்டார்கள் ஒன்றும் புரியாத அப்பாவியாக இருந்த நான் என் முன் தட்டில் இருந்த சுவையான ஐந்து வடைகளில் நான்கை உள்ளே தள்ள அதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திகொண்டேன்,

பரிசல்காரன் அமைதியாகவே கேட்டுகொண்டிருந்தார் அதிகம் பேசவில்லை , வடகரை வேலன் பரிசல்காரன் இருவர் முகத்திலும் ஒரு அதிருப்தி நிலவியது தெரிந்தது, இப்போது அவர்களின் பதிவுகளை பார்த்த் போதுதான் அது ஏன் என்று புரிகிறது, கடைசிவரை இருந்திருந்திருந்தால் அவர்களுக்கு இந்த சந்திப்பு இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

திருப்பூரிலிருந்து வந்த நண்பர் வெயிலான் முன்பே அறிமுக நண்பர்போல தோன்றினார் நன்றாகவும் பேசினார், த‌ன்னுடைய வேலையின் தன்மை பற்றி கூறினார் நிர்வாகத்திற்காக வேலை பார்த்தாலும் தொழிலார்களுக்கு சாதகாமாக தன்னால் எவ்வளவு முடியுமோ அதை செய்து வருவதுபற்றி சொன்னது குறிப்பிடத்தக்கது!

காங்கேயத்திலிருந்து வந்து சந்திப்பில் வயது குறைவாக இருந்த கார்த்தி அமைதியாக ஆர்வமாக எல்லோரும் பேசுவதி உன்னிப்பாக கேட்டுகொண்டிருந்தார், சென்னையில் படிக்கிறார் எல்லொரையும் சென்னைக்கும் வாங்க என்று அழைத்தார்,கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் தமிழ்வளர வலைபதிவுகள் வளரவேண்டும் என்ற முக்கிய கருத்துக்கு அடையாளமாக சில கருத்துக்களை சொன்னார் இரவு ஊருக்கு ப்ய்ய்விட்டு சென்னை புறப்பட வேண்டும் என்பதால் அவரும் விரைவாக புறப்பட்டார்,

spb & இசைப்பிரியர் கோவை ரவி அவர்களை பற்றி அதிகம் தெரியவில்லை!

லதானந்த் கிளம்பியதும் பலரும் பல காரணங்களால் உடன‌டியாக சாப்பிடாமல் கூட புறப்பட தயாரானார்கள் பலரும் வற்புறுத்தி இருந்து சாப்பிட்டுவிட்டு சென்றனர். வடகரை வேலன் வீட்டில் அசைவ சாப்பாடுக்கா சப்பிடமாட்டேன் என்று சொன்னாரோ என்னவோ? 2 மணிக்கு ரயிலுக்கு செல்லவேண்டி இருந்தும் நண்பர்களின் வேண்டுகோளுக்காக 1.20 வரை இருந்து சப்பிட்டு விட்டுப்போன ஸ்ரீ, அவ‌ரது மகிழ்ச்சியான பேச்சும் குறிப்பிட‌த்த‌க்க‌வை! தக்காளி,லெமன், தயிர் சாதம் என சுவையான உணவு, குறிப்பாக‌ தக்காளி சாதம் சூப்பர்!

சிங்கப்பூரிலிருந்து வந்த‌ கிரியும் விரைவாக புறப்பட்டதால் அதிகம் பேசமுடியவில்லை!

சாப்பாடு முடித்ததும்,பல்வேறு தலைப்பில் பல்வேறு வகையான விவாதங்கள் நடை பெற்றது!குறிப்பாக இரண்டு விவாதங்களை சொல்லலாம்!

ஒன்று கடவுள் நமபிக்கை பற்றிய விவாதம்!கடவுள் உண்டென்ற கருத்தில் நான், ஐயா ஞானவெட்டியான், நண்பர் தொட்ட‌ராயஸ்வாமி! கடவுள் இல்லை என்ற கருத்தில் தியாகு, சஞ்சய்,தூங்கி எழுந்தமின் ஓசை செல்லா!அருமையான சொற்போர்!சஞ்சாய் அறிவுப்பூர்வமாக கருத்துக்களை முன்வைப்பார்! அதற்கு ஞான வெட்டியான் ஐயா அருமையான விளக்கம் கொடுப்பார்! தியாகு ஒரே கேள்வியை மீண்டும் கேட்பார், தொட்டராய சுவாமியும் நானும் பல விதமான பதில் சொல்லுவோம் ! ஆனால் இருதர‌ப்பினருமே ஒருவர் கருத்தை மற்ற‌வர் ஏற்க மாட்டோம்!

கடைசி கட்டத்தில் அறிவியல் அனைத்தையும் விளக்குகிறது உதாரணத்திற்கு நீரை இரு பங்கு ஹைட்ரஜன் ஒரு பங்கு ஆக்க்சிஜன் H2O என்று நிருபிக்கிறது அது மாறாது அதுபோல் கடவுளை நிரூபித்தால்தான் நம்புவோம் என்கிறார்கள், மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி உலகில் உள்ள‌து அதுதான் கடவுள் என்று வெவ்வேறு மதங்களில் வெவ்வேறு விதமாக சொல்கிறோம், அதை மனதால் உண்ரத்தான் முடியும் என்றால் அதை தியாகுவும் சஞ்ச‌யும் நம்ப மறுக்கிறார்கள்!

கடவுள் யாரும் நம்பிக்கையால் யாருக்கும் எந்த லாபமும் இல்லை ஏமாற்று வேலைதான் எனவே அது தேவையில்லை என்கிறார்கள்! யாரொ ஒரு சிலர் கடவுளின் பெயரில் ஏமார்றுவது உண்மைதான் ஆனால் பலரது வாழ்கையில் கடவுள் நம்பிக்கைதான் ஒரு அழுத்தமான பிடிப்பைக்கொடுக்கிறது அதனால் பலர் பயனடைகிறார்கள் என்றாலும் ஏற்க மறுக்கிறார்கள்! கடவுள் நம்ம்பிக்கை இதனால்தான் ஏற்பட்டது என்கிறார் தியாகு, அந்த காரணம் உண்மையாகவே இருக்கலாம் ஆனால் " அதுவும் ஒரு காரணம் என்று சொல்ல முடியுமே தவிர" அதுமட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது" என்றால் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்! கடைசியில் எங்கும் எப்போதும் தீர்க்கமுடியாத பிரசனைகளில் கடவுள் உண்டா இல்லையா என்பதும் அடங்கும் என்ற கருத்துடன் விவாதம் முடிக்கப்பட்டது!

இன்னொன்று கல்வியால்தான் இன்று இளைஞர்களிடம் போராடும் மனபக்குவம் இல்லை! அவர்கள் கேள்வி கேட்பதில்லை என்று தியாகு சொல்லி விவாதிக்க! பல‌ரும் அதை மறுக்க ,எல்லோரிடமும் அந்த திறன் இருக்கிறது ஆனால் அதனால் ஏற்படும் விளைகள் தன்னை பாதிப்பதாக இருக்கும் போது அவன் அத சுய நலத்திற்கு சாதகமாகவே செயல்படுகிறான் என்று எல்லோரும் சொல்ல! பாவம் தியாகு, ஒரு வழி பண்ணிவிட்டார்கள் அவரை அந்த நேரத்தைல் அவரை பார்கவே பரிதாமாக இருந்தது!இன்னும் பல விவாதங்கள் நடந்தன இன்னு சொன்னால் இன்னும் பதிவு பெரிதாகிவிடும்,

தொட்டராயசுவாமி நல்ல சிந்தனையாளர், பெயர் புரியாதபடி இருக்கிறதே வேறு பயரில் எழுதலாமே என்று சிலர் பரிந்துரைத்தபோது, அதுதான் என்னுடைய சிறப்பு என்று அழுத்தமாக கூறிவிதம் அவரை நன்றாக நினைவில் நிறுத்தும்படி செய்தது


மூலிகை வளம் பற்றி வலைபதிவில் பயணுள்ள கருத்துக்களை எழுதுவரும் குப்பு சாமி அய்யா மிக முக்கியமானவர், மூலிகை மற்றும் இயற்கைவளம் பற்றிய பல பயணுள்ள கருத்துக்களை கூறியதோடு பலருடைய சந்தேகங்களையும் தெளிவு படுத்தினார்,கடைசியில் எல்லொருக்கும் சில மீலுகை தாவரங்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது!

நண்பர் தியாகு அதிக சமூக அக்கறையுள்ள மனிதர்களில் இவரும் ஒருவர்! கடந்த வருட சந்திப்பிலேயே நண்பரானதால் அதிக‌ நட்புடன் பழகுவார்!தொழில் வர்கத்தினருக்காக பாடுபட்டாலும் தன் வேலியின் தன்மை அதற்கு மாறாக இருப்பதாக குறைபட்டுக்கொண்டார்,பூர்வீகம் மதுரைய சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது! நன்றாக கவிதை எழுதும் திற‌மை படைத்தவர்பொதுநலம் வாந்த கருத்துக்களுக்காக தன் கவிதைத்திறணுக்கு தற்காலிகமாக தடா போட்டுள்ளார்!செம்மலர் பற்றிய சில கேள்விகளுக்கு சிறப்பாக பதில் அளித்தார்

விண்சண்ட் நம்முடைய வாழ்வில் பல பிரச்சனைகளுக்கு காரணம் இயக்கையை மதிக்காமல், அதனுடன் ஒன்றிப்போகாமல் நடந்துகொள்வதுதான் என்ற கருத்தை பல்வேறு ஆதாரங்களுடன் புரியும்படி விளக்கினார், மரங்கள் பற்றியும் பல பயனுள்ல தகவல்களை வழங்கினார்,

தமிழ்பயணிசிவா, நல்ல உதவியாளர், டெக்னிக்கலாக புரியாத பல விசயங்களை புரியும் படி சொல்லி புடியவந்தார், எப்போது கோவை சந்திப்பு நடந்தாலும் அதில் முக்கிய பங்கு வகிப்பவர்,முக்கிய கடமை ஒன்று சமீபத்தில் முடிந்த மகிழ்ச்சியில் தற்போது தீரமாக பெண் தேடிகொண்டிருப்பவர்! அடுத்த சந்திப்பில் குடும்பஸ்த்ராக இருப்பார்!

சஞ்சய் மொக்கை மன்னன்,எந்த ஒரு விவாத சூழ்நிலையிலும் தன் கருத்தை கோபப்படாமல் நிதானமாக அழுத்தமாக சொல்லும் அறிவாளியும்கூட!கல கலப்பாக பேசி இருக்கும் இடத்தை மகிழ்ச்சிப்படுத்துபவர்!

ஓசைசெல்லா நிறைய கருத்துக்களை தெரிவித்தார் அதில் சில முரண்பாடாக இருந்தாலும்! இடையிடைய பயணுள்ள தகவல்களையும் சொன்னார் அதில் குறிப்பிட்டு சொல்லவேண்டியது ஆரோவில்லைச் சேர்ந்த பேராசிரியர் வீட்டில் வெப்பததை குறைக்கவும், உடல் ஆரோக்கியத்திற்காகவும் சொன்னதாகச் சொன்ன‌ ,மாடித்தோட்டம், ஜன்னல் சன் சைட் கொடிகள், வாகனப் புகை கெடுதியை உணர்த்தும் சைலன்சர் பரிசோதனை போன்ற‌ தகவல்களை விளக்கி கூறியது அருமை!
ஒன்னுமில்லாத விசயத்துகெல்லாம் பதிவு போடுறீங்க இந்தமாதிரி நல்ல விசயங்களை எல்லாம் ஏன் பதிவுகளில் போட மாட்டிங்கிறீங்க என்று யாரோ அவ‌ரிடம் சொன்னார்கள்

புரவியிடம் எழுதி ரொம்ப‌ நாள் ஆகிவிட்ட‌து ப‌ற்றி கேட்ட‌த‌ற்கு விரைவில் அதிர‌டியாக‌ ஆர‌ம்பிக்க‌ப்போவ‌தாக‌ தெரிவித்தார்!விளப்பரத்துறையில் பணியாற்றுபவர், தன் துறை ரீதியாகவும் திறமையானவர் என்பது பேச்சிலேயே புரிந்தது!

சந்திப்பில் கடைசியாக வந்திருந்தார் சுவீட் சுரேஷ்,பொறியாளர் மற்றும் விவசாயி, தான் பட்ட இழப்புகள், விவசாயத்தில் உள்ள‌ பிரச்சனைகள், விவசாயிகளிடம் இண்டர்நெட் உபயோகத்தை வளர்த்தால் அவர்கள் இன்னும் பல நல்ல முறைகளை பயன்படுத்தி விவசாயத்தை விருத்தி செய்ய முடியும், அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார், வங்கிக்கடன் வாங்குவதில் இன்று உள்ள பல்வேறு சிக்கல்கள் பற்றியும் எடுத்துச்சொன்னார், விவசாயதில் லாபம் முக்கியம் ஆனால் லாமபம் ஒன்றை மட்டும் அடிப்ப‌டையாக கொண்டு அதை செய்யக்க்கூடது நாட்டின் தேவையையும் கருத்தில் கொள்ளவேன்டும் என்று அவர் சொன்ன விதம் அருமை!

மஞ்சூர் அண்ணா இந்த சந்திப்புக்கு காரணகர்த்தா! முத்தமிழ் குழுமத்தின் மூலம் பல தமிழர்களை ஒருங்கிணைத்தவர்!எல்லா விவாதங்களிலும் அளவாக பங்கேற்றுவிட்டு ஒதுங்கிக்கொண்டார்! இனி வலை பதிவுகளில் அதிகம் எழுதப்போவதாக சொன்னார்!இன்முகத்துடன் அனைவரையும் உப‌சரித்தவர், வாழ்த்துக்கும் பாராடிஆற்கும் உரியவர்!

த‌மிழ்ப‌ய‌ணி சிவா,சஞ்சய் மற்றும் புரவி மூவரும் ம‌ஞ்சூர் அண்னாவுக்கு இந்த சந்திப்பு ஏற்பாட்டில் மிக‌வும் உதவிக‌ர‌மாக‌ இருந்தார்க‌ள், ச‌ந்திப்பு முழுவதும் இடையிடையே சாக்லேட், சூடான காபி,வடை குளு குளு ஜூஸ்,என‌ மாற்றி மாற்றி ஏதாவ‌து ஒன்றை கொடுத்துக்கொண்டேதான் இருந்தார்கள்,மஞ்சூர் அண்ணாவின் குடும்பத்தினருக்கு இந்த உபசரிப்புக்காக ஒரு சிறப்பு நன்றி.

சந்திப்பு முடிந்ததும் தமிழ்பயணி சிவா அவர்கள் என்னை பைக்குல் ஏற்றி ரயில் நிலையத்தில் இறக்கிவிட இரவு 8.30 மணிக்கு ரயிலேறி சந்திப்பு நிகழ்வுகளை சந்தோசமாய் அசைபோட்டபடி பயணித்தேன் மதுரையை நோக்கி.......





--
நட்புடன்
நம்பிக்கைபாண்டியன்

9 comments:

கோவை விஜய் said...

கோவை பதிவர் சந்திப்பு பற்றிய பிற பதிவுகளில் வராத பல செய்திகள்.நன்றி

தி.விஜய்
pugaippezhai.blogspot.com
வாங்கோணா வாங்கோ கோவையின் ரேஸ் திருவிழாவை பார்க்க வாங்கோணா..! 20 மறுமொழிகள் | விஜய்

SP.VR. SUBBIAH said...

/////ஒன்று கடவுள் நமபிக்கை பற்றிய விவாதம்!
கடவுள் உண்டென்ற கருத்தில் நான், ஐயா ஞானவெட்டியான்,
நண்பர் தொட்ட‌ராயஸ்வாமி!
கடவுள் இல்லை என்ற கருத்தில் தியாகு, சஞ்சய்,தூங்கி
எழுந்தமின் ஓசை செல்லா!அருமையான சொற்போர்!
சஞ்சாய் அறிவுப்பூர்வமாக கருத்துக்களை முன்வைப்பார்!
அதற்கு ஞான வெட்டியான் ஐயா அருமையான விளக்கம்
கொடுப்பார்!
தியாகு ஒரே கேள்வியை மீண்டும் கேட்பார்,
தொட்டராய சுவாமியும் நானும் பல விதமான பதில் சொல்லுவோம் !
ஆனால் இருதர‌ப்பினருமே ஒருவர் கருத்தை மற்ற‌வர் ஏற்க மாட்டோம்!/////

ஏற்றுக்கொண்டால் ஏது சாமி சுவாரசியம்?
ஏது சாமி பிரச்சினை?

இதற்குக் கவியரசர் ஒரு அருமையான தீர்வை
இரண்டே வரிகளில் சொல்லிவிட்டுச் சென்றார்

"உண்டு என்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை"

நம்பிக்கைபாண்டியன் said...

>>>>கோவை பதிவர் சந்திப்பு பற்றிய பிற பதிவுகளில் வராத பல செய்திகள்.நன்றி
<<<<<<<<<

நன்றி விஜய்!காலைபொழுதைவிட மாலையில் சந்திப்பு களை கட்டியது கலை கட்டியது!அதை எழுதினேன்!

நம்பிக்கைபாண்டியன் said...

>>>>>
இதற்குக் கவியரசர் ஒரு அருமையான தீர்வை
இரண்டே வரிகளில் சொல்லிவிட்டுச் சென்றார்

"உண்டு என்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை"<<<<<

ஆமாம் ஐயா கண்ணதாசன் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்!என் தாமதத்தால் உங்களைத்தான் நான் பார்க்கமுடியவில்லை இன்னொருமுறை வரிம்போது சந்திக்கிறேன்.

மோகன் கந்தசாமி said...

/////மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி உலகில் உள்ள‌து அதுதான் கடவுள் என்று வெவ்வேறு மதங்களில் வெவ்வேறு விதமாக சொல்கிறோம், அதை மனதால் உண்ரத்தான் முடியும் என்றால் அதை தியாகுவும் சஞ்ச‌யும் நம்ப மறுக்கிறார்கள்!////

நண்பரே!,
அண்டம் முழுதும் சக்தி தான் ஆக்கிரமித்து உள்ளது. பிரபஞ்ச தோற்றமும் இயக்கமும் சக்தியால் தான். அது நம் கட்டுப்பாட்டில் இல்லை. நாம் அதை வணங்குவதால் கட்டுப்படுத்தி நமக்கு நன்மை பயக்கச் செய்யமுடியாது. ஆத்திகர்கள் முடியும் என்கிறார்கள். நாத்திகர்கள் ஆதாரம் கேட்கிறார்கள். இயற்கையை கட்டுப்படுத்தி ஏற்றவாறு தகவமைக்கும் தலைமை எங்கோ இருப்பதாகவும், அதை தாம் உணர்வதாகவும், சில வகை கூலி தந்தால் அதை காட்டுவதாகவும் சிலர் கூறுவது முழுக்கவும் மோசடி.

விஞானிகளும் சக்தியை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என்கிறார்கள். அதன் பெயர் அறிவியல் என்கிறார்கள். நாத்திகர்கள் அதை மோசடி எனக் கூறுவதில்லை. ஏன்?

Anonymous said...

நட்புடன்
www.thottarayaswamy.net

கோயில் முன் பக்தர்களை பார்த்தபோது..
என் மனதில் தோன்றியthu..

++++++++
வயதின் பெருக்கம்
அனுபவத்தை
தருவதில்லை

அனுபவம்
வயதை பொறுத்து
அமைவதில்லை

ஆணவம்
ஆறா காயம்
இது
உணர்வதற்குள்
அடங்கிவிடும் காலம்

மனிதனுக்கு
திருந்திய பின்னரே
தண்டனை தரப்படுகிறது

மேல் கோர்ட்டு
அப்பீல் கோயில்கள்

கடவுள் முன்
பக்தர்கள்,,,

++++
www.thottarayaswamy.net

நம்பிக்கைபாண்டியன் said...

((இயற்கையை கட்டுப்படுத்தி ஏற்றவாறு தகவமைக்கும் தலைமை எங்கோ இருப்பதாகவும், அதை தாம் உணர்வதாகவும், சில வகை கூலி தந்தால் அதை காட்டுவதாகவும் சிலர் கூறுவது முழுக்கவும் மோசடி.))


இது போல மோசடி செய்பவர்களை மட்டும் பார்த்து கடவுள் நம்பிக்கையை மறுக்க முடியாது! பலருக்கு நல்ல பலன்களை தரும் நம்பிக்கை ஏற்கக்கூடியதே!

நம்பிக்கைபாண்டியன் said...

(((((((வயதின் பெருக்கம்
அனுபவத்தை
தருவதில்லை

அனுபவம்
வயதை பொறுத்து
அமைவதில்லை))))))))))))

நல்ல கருத்தை சொல்லும் வரிகள் தொட்டராயஸ்வாமி

raja said...

super super tallent, enkirunthu vandhana ethellam by raja, computer, Gudalur Municipality