(நம்பிக்கைபாண்டியன்)
உலகில் விண்வெளி ஆராய்ச்சியில் முண்ணனியில் இருக்கும் பத்து நாடுகள் சேர்ந்து "அராக்" (ARAC- Asrto Resarch Association Countries) என்ற அமைப்பை உருவாக்கி பல்வேறு ஆரய்ச்சிகளை நடத்த ஆரம்பித்தன, "செவ்வாய் கிரகத்தில் மனிதன் இறங்கி ஆராய்ச்சி செய்ய" திட்டமிட்டு அதற்காக உறுப்பு நாடுகளின் 20 பேர் கொண்ட விஞ்ஞானிகள் குழு நியமிக்கப்பட்டது!
அவர்கள் இரண்டு வருட ஆராய்ச்சியின் விளைவாக செவ்வாயில் நிலவும் தட்ப வெப்பம், மற்றும் அழுத்த சூழ்நிலையில் வாழப் பழகும் ஒரு மனிதனை உருவாக்கினால் அவனால் செவ்வாயில் ஆராய்ச்சி செய்ய முடியும்! என முடிவெடுத்து அதற்கான முயற்சிகளில் இறங்கினார்கள்! ஒரு மனிதனை குழந்தையிலிருந்தே இதற்கு தாயார்படுத்த வேண்டும் என்று இரண்டு மாத கார்ப்பிணிகள் பலர் ஆரய்ய்ச்சியில் பயன்படுத்தப்பட்டனர், கர்ப்பிணிகளில் சிலர் ஆராய்சிக்காக உதவும் மனப்பானமையுடன் இதற்கு சம்மதித்தனர்,இன்னும் சிலரோ பெரும் பணத்திற்காக சம்மதித்தனர்,
பெரும் வெப்பத்தையும் குளிரையும், காற்றழுத்த மாறுபாடுகளையும் தாங்கும் விதத்தில் கருவிலிருக்கும் குழந்தையின் உடல் எலும்புகளும் தசைகளும் உருவாகும்படி, சில விநோதமான ஹார்மோன்களூம், வேதிபொருட்களும் கருவில் செலுத்தப்பட்டன!செவ்வாய் கிரகத்தில் சுவாசிக்கும் சுவாச உறுப்புகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.இதில் பல கர்ப்பிணிகள் இறந்தனர்,கருவிலேயே சில குழந்தைகள் இறந்தன சில குழந்தைகள் பிறந்தவுடன் இறந்தன, ஆனாலும் விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சித்ததால் 67 வது முயற்சியாக ஆண்குழந்தை ஒன்று வெற்றிகரமாக உயிர் பிழைத்தது!ஜனவரி மாதம் பிறந்ததால் கூப்பிட எளிதாக அவனுக்கு"ஜனா" என்று பெயரிட்டனர்,ஆராய்ச்சிச்சிக்கு இன்னொரு குழந்தை இருப்பது நல்லது எனத்தோன்றியதால் தொடர்ந்து முயற்சித்ததில் மேலும் பலர் உயிரிழக்க அடுத்த ஒருவருடத்தில் 106 வது முயற்சியாக பெண்குழந்தை ஒன்று பிறந்தது!பிப்ரவரி மாதம் பிறந்த அவளுக்கு "பிபா" என பெயரிட்டனர்!பல குழ்ந்தைகளின் இறப்பை அறிந்த ஐ.நா. சபையின் ரகசிய கண்காணிப்பு பிரிவு, மேலும் இதை தொடர தடை விதித்தது!கண்காணிப்பாளரையும் நியமித்தது! இது பற்றிய தகவல்கள் வெளி உலகிற்கு தெரியாமல் ரகசியமாகவே இருந்தது!
செவ்வாய் கிரகத்தின் தட்ப வெப்ப சூழல், மற்றும் ஈர்ப்பு விசை மாறுபாட்டிற்கு சிறிது சிறிதாக மாறும்படி தனி ஆராய்ச்சி உள் அரங்கம் உருவாக்கப்பட்டு அவர்கள் இருவரும் 24 மணிநேரமும் கண்கானிக்கப்பட்டனர்!அனைத்து விதமான கல்வியும் தகவகளும் அவர்களுக்கு கற்றுத் தரப்பட்டன. சில நாட்கள் திட உணவும், சில நாட்கள் கலோரி மாத்திரைகளும் உணவாக தரப்பட்டன!ஜனா சிறுனைல் இருந்தே தகவல் தொழில் நுட்பங்களை கற்றுகொள்வதிலும் பயன்படுத்துவதிலும் சிறந்த நிபுணராக இருந்தான் ,எதையும் எளிதில் புரிந்துகொள்வான்,ஆனால் சோம்பேறியாக இருந்தான். பிபா மிகவும் சுறுப்பாக இருப்பாள், ஆனாள் மெதுவாகவே புரிந்துகொள்வாள் அங்கிருந்த ஏழு பெண் விஞ்ஞானிகளுக்கும் "பிபா" செல்லப்பெண்ணாக விளங்கினாள்,இணைந்து பணியாற்றப் போவதால் பிபாவும், ஜனாவும் அவ்வபோது சந்தித்து பேச வாய்ப்பு தரப்படும், நலம் விசாரிக்கவும்,ஆராய்ச்சி பற்றியும்தான் பேசமுடியும், நட்பாக கூட மனதில் நினைப்பதையெல்லாம் பேசமுடியாது தீவிர கண்கானிப்பில் இருப்பதால்!இதை பிபா பெரிதாக எடுத்துகொள்ளவில்லை! ஆனால் ஜனாவுக்கு இது மிகவும் ஏமாற்றமாக இருந்தது வருடங்கள் ஓட ஆரம்பித்ததும்! ஜனா அவளை பார்வைகளாலேயே காதலிக்க ஆரம்பித்தான்!நண்பர்களாக இருந்த விஞ்ஞானிகள் சொன்ன காதல் கதைகளை கேட்டு நிறைய கற்பனை செய்தான், தனிமையில்தான் அவளிடம் மனம் விட்டும் பேசமுடியும் என்று காத்துகொண்டிருந்தான்
செவ்வாய் பற்றி இதுவரை அறிந்த தகவல்படி முழுமையாக பயிற்ச்சி கொடுத்ததும்! 2035 ஆம் ஆண்டு மே மாதம் பயணத்தேதி குறிக்கப்பட்டது!
இது உலகின் முக்கியமான ஆராய்ச்சி, இவர்கள் கையில் தான் அனைத்தும் இருக்கிறது, இவர்களின் வெற்றி பெற்றால் இன்னும் பல ஆராய்சிகள் தொடரும், இல்லையென்றால் இது பற்றிய ஆராய்ச்சிகள் அனைத்தும் நிறுத்தப்படும்!என "அராக்" நாடுகள் முடிவெடுத்தன, ஜனாவும் பிபாவும் ஒரு வருடத்திற்கு தேவையான கலோரி மற்றும் நீர் மாத்திரைகளுடனும்,செவ்வாயில் ஆராய்ச்சி செய்ய சிறியரக சூரிய பேட்டரி பைக் ஒன்றையும் உடன் எடுத்துகொண்டு திட்டமிட்ட நாளில் செவ்வாயை நோக்கி "மார்ஸ்பைண்டர் 3" விண்கலத்தில் பயணித்தார்கள் !இவர்கள் வெற்றி பெற்றால் மட்டுமே வெளி உலகிற்கு ஆராய்ச்சி முடிவுகள் அறிவிக்கப்படும் என விஞ்ஞானிகள் முடிவெடுத்தனர்,ஜனா சிறப்பாக விண்கலத்தை செயல்படுத்தி இடையிடையே வான் மண்டத்தில் கண்ட அபூர்வ புகைப்படங்களை பூவியின் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பிகொண்டிருந்தான், நான்கு மாத பயணத்திற்கு பின்செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தில் இரவு நேரத்தில் இறங்கியது விண்கலம்,
தட்ப வெப்பம் பழகும் வரை தேவை என்பதால் கவச உடையுடன் இறங்க தயாரானார்கள் ,விண்வெளி சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சாதனை செவ்வாயில் முதலில் கலடி வைத்த மனிதன் என்ற பெருமை தன் காதலிக்கு கிடைக்கட்டும் என்று நினைத்து "நீ, முதலில் இறங்கு பிபா என்றான்" இல்லை ஜனா கொஞ்சம் பயமா இருக்கு நியே முதலில் இறங்கு என்றாள்! நான் இங்கேதானே இருக்கேன், சும்மா இறங்கு என்று தைரியம் கொடுத்ததும்,அவள் வலது காலை முன்வைத்து இறங்கி செவ்வாயில் நிற்பதை கைகளில் இருந்த கையடக்க கம்ப்யூட்டர் சாதனத்தின் மூலமும், விண்கலத்தில் பொருத்தப்பட்ட கேமராவிலும் பதிவு செய்துவிட்டு பின் அவனும் சேர்ந்து நின்று புகைபடங்களை எடுத்துகொண்டான்,
புகைபடத்தில் மட்டுமே பார்த்த செவ்வாய் கிரகத்தை ஆச்சர்ர்யத்தோடு இருவரும் பார்த்துகொண்டிருந்தனர்!ஜன வெப்பநிலையை தன் கம்ப்யூட்டரில் பார்த்தான் _120 செல்சியஸாக இருந்தது! எங்கும் சிவப்பு மயமாக இருந்தது!உறைந்து இறுகிய பனி பாறைகளாக காட்சியளித்தது!வானத்தை பார்த்த பிபா"ஹேய் ஜனா,, இங்க பாரேன் இரண்டு நிலாக்கள் இருக்கிறது என்றாள் வியந்த கண்களுடன்" இதன் நான் பூமியிலேயே பார்த்திருக்கேன் உன் கண்கள் வடிவில்" என சொல்ல நினைத்தான் ஆனால் சொல்லவில்லை!எடுத்த புகைப்படஙகளையும் வீடியோக்களையும் அனுப்பினான், புகைப்படங்கள் மட்டுமே சென்றடந்தன!
பூமியில் "அராக்" அமைப்பு விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார்கள்,1972ல் மாரினர்_9 விண்கலம் செவ்வாய்க்கு அருகில் பறந்து படம் பிடித்ததே சாதனையாக நினைத்த உலகில் இன்று மனிதன் தரையிறங்கி விட்டான் என்பதை உடனடியா ஆதரப்பூர்வமாக தங்கள் ஆராய்ச்சிகளை,இண்டர்நெட்டில் வெளியிட்டார்கள், அடுத்த சிலமணி நேரங்களில் உலகெங்கும் பரவியது! மிகப்பெரிய வெற்றிக்கு இதன் உறுப்பு நாடுகள் விழாக்கோலம் பூண்டன!ஜனாவும், பிபாவும்"ஒரே நாளில் உலகம் முழுவதும் புகழ்பெற்றவர்களாக மாறினார்கள்,இன்னும் சிலரோ இதை நம்பாமல் இவை அனைத்தும் பொய் ஏதோ செட் போட்டு எடுத்திருக்கிறார்கள் என்று விவாதங்களில் இறங்கினர்!
காலையில் சிவப்பு நிறத்தில் சூரியன் உதிக்க ஆரம்பித்ததும் பைக்கை எடுத்துகொண்டு ஒரு திசைநோக்கி பயணித்தார்கள்,இனி அங்கிருந்த சூழலுக்கு உடல் ஒத்துழைக்கும் என்பதால் கவச உடையை தவிர்த்துவிட்டார்கள்.இன்று பைக்கில் முதல் முறையாக அவன் தோள்களை பிடித்தபடி பின்னே அமர்ந்தாள் பிபா, ஜனா மகிழ்ச்சியில் திளைத்தான்! அவள் பார்க்காத போது அவள் முக அழகையும் சிரிப்பையும் ரசித்துக்கொண்டிருப்பான்!" அவன் பார்வைகளின் வித்தியாசம் தெரிவதை பிபா உணரத்தொடங்கிணாலும் அதை பெரிதுபடுத்தவில்லை!செவ்வாய் கிரகமெங்கும் பனிப்பாறைகளும், சிறு சிறு மணல்மேடுகளும் இருந்ததன! ஒரு மணல் மேட்டில் இருந்த அழகிய கல் ஒரு பெண் அமர்ந்திர்பது போன்ற தோன்றத்தை ஏற்படுத்தியது!"இதைதான் முன்பு பூமியில் பரபரப்பாக பேசிகொண்டார்களாம் "என்றான் ஜனா.நேரம் செல்லச் செல்ல வெப்பம் அதிகமாக இருந்தது!ஒரு பாறையில் குகை போன்ற அமைப்பு இருந்தது! அங்கு சிறிது நேரம் அமரலாம், சூரிய ஒளியில் பைக்கின் பேட்டரி ஜார்ஜ் ஆகட்டும்" என்றான், இருவரும் அமர்ந்தார்கள்,
தன் உடலிலும், பிபாவின் உடலிலும் இருந்த தகவல் தொடர்பு சாதனங்கள் அனைத்தையும் தற்காலிகமாக செயலிழக்க செய்து பூமியுடனான இணைப்பினை துண்டித்தான், ஏன் இப்படி செய்கிறாய் என்ற பிபாவிடம் "உன்னிடம் தனியாக பேசவேண்டும் என் பலவருட கனவு இது" என்றான்! உன்னை எனக்கு பிடித்திருக்கிறது பிபா, உன்னை நான் காதலிக்கிறேன்!உனக்கு என்னை பிடித்திருகிறதா என்றான், அவள் மொளனமாக இருந்தாள்! நாம இங்க காதலிக்க வரலே ஆராய்ச்சி செய்ய வந்திருக்ககோம், வந்த வேலையை மட்டும் பார்ப்போம் என்று பூமிக்கு இணைப்பை கொடுத்தாள்!அதற்கு மேல் அவனால் பேசமுடியவில்லை!அங்கும் இன்கும் போய் ஆராய்ச்சியை தொடர்ந்தார்கள்!
ஆராய்ச்சியில் இங்கிருக்கும் பணிப்பாறை இரண்டுவகைகளாக இருகின்றன, ஒன்று நிரந்தரமானவை இன்னொன்று தற்காலிக பணிபாறைகள், தற்காலிகமன பணிப்பாறை அதிக வெப்பத்தால் பனி உருகி நீராகி பிறகு சூடாகி ஆவியாவதற்கு பதிலாக நேரடியாக ஆவியாகி விடுகிறது!( பதங்கமாதல் தத்துவத்தில் கற்பூரம் காற்றில் கரைவது போல) பனிப்பாறைகளில் கார்பன்டை ஆக்சைடு உறைநிலையில் இருந்தது!ஒரு காலத்தில் இங்கு நீர் இருந்ததற்காக ஆதாரமாக நீர் ஓடிய ஆறு மற்றும் ஏரி தடங்களும் இருந்ததன!ஒரு காலத்தில் செவ்வாய் கிரக்மும் பூமியைப்போல்தான் இருந்திருக்கிறது என்பதி உண்மையாக்கும் விதமாக இருந்தது,பூமியைவிட ஈர்ப்புவிசை இரண்டு மடங்கு குறைவாக இருக்கிறது, இதனால்தான் செவ்வாயை சுற்றி வளிமண்டல வளையம் இல்லை,இன்னும் பலஅறிந்த உண்மைகளை ஆதாரமாக கண்டறிந்து இருவரும் விண்கலத்திற்கு வந்தார்கள்!
அன்று முழுவதும் இருவரும் பேசிகொள்ளவில்லை!அடுத்த நாளும் அதே போல் ஆராய்ச்சிக்கு சென்றனர் நேற்று சென்ற திசைக்கு எதிர் திசையில் சென்றனர்!வெகுதூரம் சென்றார்கள்!அவள் பதில் சொல்லா கோபத்தில் வண்டியை உச்ச வேகத்தில் செலுத்தினான்
ஜனா ஏதாவது பேசுவான் என்று எதிர் பார்த்தாள் ஆனால் அவன் அமைதியாகவே வந்தான்! ஒரு இடத்தில் சைகையால் நிறித்தச் சொல்லிவிட்டு பூமியுடன் இணைப்பை துண்டித்தாள்!" எவ்வளவு நாளா என்னை காதலிகிறாய் ஜனா" என்றாள்' உன்னை சில மாதங்கள் என்னை பார்க்கவே விடாமல்! பிறகு உன்னை பார்த்தபோது நீ நிறையவே மாறியிருந்தாய்!முன்பை விட அழகாக இருந்தாய்,சற்று குண்டாக இருந்தாய்!அப்போது சாதரணமாக ரசிக்க ஆரம்பித்தவன், பிறகு உன்னை நினைத்து நினைத்தே காதாலனாக மாறிவிட்டேன்" என்று கண் சிமிட்டினான் "அடப்பாவி அப்போ இருந்தேவா" என செல்லமாக கைகளால் முதுகில் குத்தினாள்! "நீ காதலிப்பதாக சொல்வது கேட்க சந்தோசமாகத்தான் இருக்கிறது ஆனால் யோசிக்கத்தான் பயமாக இருக்கிறது"நம்ம ஆரய்ச்சி என்ன ஆகப்போகுதோ நாம ஒன்னுசேரமுடியுமா என்றாள் கவலையுடன்!
"நாம் இருவருமே வாழ்கையில் நிறைய சந்தோசங்களை நாம் இழந்துவிட்டோம் பிபா" அம்மா பாசம் தாம் மிக உயர்ந்ததாம் ! பள்ளிக்கூடத்துக்கு போய் பாடம் படிப்பதும் நண்பர்களுடன் விளையாடுவதும், ஊர்சுற்றுவதும் மறக்கமுடியாத நினைவுகளாம் இளம் வயதில் சிறு சிறு மனத்தவிப்புகளை எல்லாம் காதல் என நினைத்து கனவுகளில் மூழ்குவது இனிமையான தருணங்களாம்! இதில் எதுவுமே நமக்கு நிகழவில்லை! இன்ப துன்பங்கள் கலந்த திருமணம், குடும்பம் என்ற நிகழ்வுகளையாவது நம் வாழ்க்கையில் கண்டிப்பாக பெற வேண்டும் பிபா"
"எனக்கு நீதான் இருக்கிறாய், உன்னைத்தான் பிடித்திருக்கிறது கடைசிவரை சேர்ந்து வாழ்வோம் பிபா! மறுத்துவிடாதே!" என்றான் ஜனா!
பிபா கண்கலங்கினாள்!அவன்மேல் சாய்ந்து தன் காதலை கலங்கிய கண்களால் வெளிப்படுத்தினாள்!பிறகு சிறிதுநேரம் இருவரும் சிரித்து பேசியபின் "போகலாமா பூமிக்கு இணைப்பு கொடுக்கலாமா?" என்றாள், அதற்குள்ளாகவா..! "நம் காதலின் அடையாளமாக ஏதாவது தரலாமே என்றபடி அவள் உதடுகளை பார்த்தான்" "டேய்..தொலைச்சுடுவேன்! இன்னைக்குதான் காதலிக்கவே ஆரம்பிச்சுருக்கோம் அதுகுள்ள இவ்வளவு அவசரமா" இதுக்கு பயந்துதான் காதலிக்கவே பயமா இருக்கு என்றாள்! "அவனவன் காதலிக்கிறதா சொல்லிட்டு என்னென்னவோ செய்யுறான்,அதுக்கு நான் எவ்வளவோ பரவாயில்லை!" என்று சொன்னவன் அவளுக்கு பின்னால் இருந்த பாறையை உற்றுப்பார்த்தான் ஏதோ நகர்வது போல் தெரிந்தது! ஓடிச்சென்று அருகில் பார்த்தான்" ஒரு மிகப்பெரிய எறும்பு ஊர்ந்து சென்று கொண்டிருந்தது!
ஹே!.............வெற்றி...... வெற்றி... செவ்வாய் கிரகத்தில் இன்னும் உயிர்கள் இருக்கின்றன!என்று சந்தோசக்கூச்சலிட்டான், அந்த எறும்பை எடுத்து பைக்கில் இருந்த ஒரு டப்பவின் உள்ளே போட்ட்டவுடன் பூமிக்கு இணைப்பு கொடுக்கலாமா"என்ற பிபாவிடம் இன்னும் சற்று பொறு,, அருகில் வேறு ஏதேனும் உயிர்கள் வாழுகிறதா என பார்த்துவிட்டு முழுமையன தகவலாக தருவோம் என்று சொல்லி பைக்கில் ஏறி இன்னும் அதிவேகமாக முன்னோக்கி சென்று ஒவ்வொரு பக்கமாக தேடிகொண்டிருந்தான் அடுத்த சில மணி நேரங்களில் யாரோ பின் தொடர்வது போல் ஒரு உணர்வு தெரிந்தது! உற்றுப்பார்த்தான் வானத்தில் இருந்த சில அடர்வுமிகு ஒளிக்கற்றைகள் பின் தொடர்வதை உண்ர முடிந்தது, உடனடியாக பைக்கை விட்டுவிட்டு பிபாவுடன் அருகில் தெரிந்த குழிக்குள் ஓடி ஒளிந்துகொண்டான்.
தன் கையில் கட்டியிருந்த கம்யூட்டரில் ஒரு பகுதியை மட்டும் இயக்கி அந்த ஒளிக்கற்றைகளை கண்கானித்தான், அவைகள் அந்த சிவப்பு எறும்பு இருந்த டப்பாவில் விழுந்தன!ஒரு நொடியில் பைக் வெடித்து சாம்பலாக மாறியது, அந்த எறும்பில் இந்த கிரகத்தின் வேவுபார்க்கும் கண்காணிப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டிருப்பதை உணரமுடிந்தது! இதைப் பார்த்த பிபா மயக்கமானாள்!அவளை தோளில் தூக்கிகொண்டு இனி விண்கலத்திற்கு திரும்பமுடியாது என தெரிந்ததால் முன்னோக்கியே நடக்க ஆரம்பித்தான்! ஒரு சீரான உயரத்தில் பணிப்பாறைகளால் பெரிய எல்லைச்சுற்றுச் சுவப் போன்ற அமைப்பு இருந்தது, அதைத்தாண்டிதும் தரைலிருந்த பனிப்பாறைகளை உடைத்துக்கொண்டு முகம் மறைத்த சில போர்வீரர்கள் சுற்றிவளைத்தனர்!அடுத்த நொடி என்ன நிகழ்ந்ததென்றே அவனுக்கு தெரியவில்லை!
விழித்துப்பார்த்தால்!ஒரு பெரிய ஆராய்ச்சிகூடத்தில், இருவருமே அருகருகே கட்டிவைக்கப்பட்டிருப்பதை உணர்ந்தார்கள்!அவர்களிடமிருந்த பூமிக்கான தகவல் இணைப்புக் கருவிகள் அப்புறப்படுத்தபட்டிருந்தன!அவர்களை சுற்றி சில மனிதர்கள் அமர்ந்திருந்தார்கள்!அவர்கள் இந்த கிரகவாசிகள், ஆனால் பூமியில் வாழும் மனிதனைபோலதான் இருந்தார்கள்,அனைவருக்கும் தலைமுடி சிவப்பாகவும், உடல் முழுவதும் வெள்ளையாகவும் பார்ப்பதற்கு வித்தியாசமக இருந்தார்கள்,ஜனாவுடன் ஏதோ ஒரு புதியமொழியில் பேச ஆரம்பித்தார்கள்!முதலில் அமைதியாக இருந்த ஜனா அவர்களுடன் அதே மொழியில் பேச ஆரம்பித்தான்!இவனுக்கு எப்படி இவர்களின் மொழி தெரியும் இவனுக்கு ஆங்கிலம் மட்டும்தானே தெரியும்! இவ்வளவு நாட்களாக என்னுடன் கூட ஆங்கிலத்தில்தானே பேசிகொண்டிருந்தான், என குழப்பத்தோடு அவர்களுடன் பேசிகொண்டிருந்த அவனை பார்த்து "என்னமொழி ஜனா இது! உனக்கெப்படித்த் தெரியும் இந்த மொழி" என்று கேட்டாள், ஜனா அவளிடம் திரும்பி "தமிழ் மொழி" என்றான்.
ஜனாவை சுற்றியிருப்பவர்கள் செவ்வாய் கிரகத்தின் வானியல் ஆராய்ச்சிகுழுவினர்,அவர்களிடம் எங்கிருந்து வருகிறோம் எதற்காக வருகிறோம், எப்படி வந்தோம்" என எல்லாவற்றையும் மறைக்காமல் சொல்லிக்கொண்டிருந்தான்,தங்கள் உடலைல் பல மாற்றங்கள் செய்ததால்தான் இங்கு உயிரோடு இருக்க முடிகிறது என்பதையும் தெரிவித்தான்,நீண்ட நேரம் பேசிகொண்டிருந்தான் ஜனா, முதலில் கட்டிவைத்து பேசிக்கொண்டிருந்தவர்கள், பிறகு இவன்மேல் சற்று நம்பிக்கை வந்ததும் கட்டுகளை அவிழ்த்துவிட்டனர், ஜனா அருகில் பிபாவும் அமர்ந்துகொண்டாள்,
பலமணி நேரமாக பேசிகொண்டிருந்தனர்! பூமியைபற்றி நிறைய கேள்விகள் கேட்டார்கள, பொறுமையாக பதில் சொன்னான்! செவ்வாய் கிரகத்தைபற்றி தான் அறிந்தவற்றை எல்லாம் சொல்லி, "இன்றைய சூழ்நிலையில் இங்கு உயிர் வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை என்று பூமியில் கண்டுபிடித்திருந்தோம்! எப்படி உங்களால் இது சாத்தியமாகிறது?"என்றான்,
செவ்வாய் கிரகத்தின் தலைமை விஞ்ஞானி "செங்கதிரான்" சத்தமாக சிரித்தார், இயற்கையை பற்றி யாராலும் முழுமையாக ஆராய்ச்சி செய்ய முடியாது தம்பி!அது நாமாக உவாக்கும் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டது!முதலில் நாங்களும் வேறு கிரகத்தில் உயிர்வாழ வாய்ப்பில்லை என்றுதான் நினைத்தோம்!அண்டவெளியில் எத்தனையோ கோள்கள் உள்ளன, அவற்றில் அங்குள சூழலுக்கு ஏற்றது போல உடலமைப்பும்,குணமும் கொண்ட மனிதர்கள் இருக்கலாம்! எங்கள் பகுதிக்கு ஆராய்ச்சி செய்ய வரும் நான்காவது கிரக மனிதர்கள் நீங்கள்"என்றதும், ஜனா திடுக்கிட்டான் "என்ன சொல்கிறீர்கள் புரியவில்லை" என்றான்,
உனக்கு சொன்னால் புரியாது என்று' வா என்னுடன் என்று ஒரு பட்டனை தட்டியதும் அவர்கள் அமர்ந்து பேசிகொண்டிருந்த அறை லிப்டாக மாறி கீழ்நோக்கிசென்றது!அறைக்கதவை திறந்து வெளியே சென்றால் அது பாதாள ஆராய்ச்சிகூடத்தின் பாதுகாப்பு பெட்டக அறை! அங்கு மூன்று பெரிய கண்ணாடி அறைகள் இருந்தன அந்த மூன்றிலுமே நொறுங்கி சேதமடைந்த நிலையில் சதுரம், முக்கோணம் மற்றும் வட்ட வடிவிலான விண்கலன்கள் இருந்தன, அவற்றின் அருகிலேயே சில மனிதர்களின் உடலகளும் பதப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தன! அவைகளை காட்டிய செங்கதிரான் "அதோ இருக்கிறதே அதுதான் சீரிய குடும்பத்தின் கடைசி கோளின் விண்கலம் அதன் அருகே கருகிய நிலையில் இருக்கும் உடல்கள் அந்த கிரகத்தின் மனிதர்கள் பனிக்குள்ளர்கள் என்று நாங்கள் சொல்லுவோம்! இங்கு வந்து வெப்பம் தாங்க முடியாமல் அவர்களாகவே இறந்து போனார்கள்! அடுத்த அரையில் இருப்பவர்கள் வியாழன் கோளில் இருந்து வந்தவர்கள் இன்னொரு அறையில் இருப்பவர்கள் நம் சூரிய குடும்பத்தை போல அண்டவெளியில் எவ்வளவோ சூரியக்குடுமபம்ங்கள் உள்ளன அதில் உள்ள ஏதோ ஒரு கோளில் இருந்து வந்தவர்கள்!எங்களின் எல்லைக்குள் ஆராய்ச்சி என்று சொல்லி அத்துமீறி நுழைந்தார்கள்,நாங்கள் அழித்துவிட்டோம்! உங்கள் அதிர்ஷ்டம் நீங்கள் தப்பித்த்க்கொண்டீர்கள்,உனக்கு தமிழ் தெரிந்ததால் தப்பித்தாய்! என்றார்.
"செவ்வாய் என் இப்படி முரண்பாடான பகுதிகளாக இருக்கிறது அப்படி என்ன மாற்றம் நடந்தது இங்கு" என்றாள் பிபா ஆங்கிலத்தில், அதையே ஜனா தமிழில் கேட்கவும் இருக்கிறது எஙகள் செவ்வாய் கிரகமும் ஒரு காலத்தில் நீ சொல்லும் பூமியைப்போல் சுபிட்சமாகத்தான் இருந்தன! ஆனால் எங்கள் மூதாதையர்கள் இயற்கைக்கு மாறாக நடந்தனர்,இங்கிருந்த காடுகளை அழித்தனர், காற்றை மாசுபடுத்தினார்கள், நீர்நிலைகளை அசுத்தப்படுத்தினார்கள், "இயற்கையை நாம் மதிக்கும்வரை அது நம்மை மதிக்கும்! அதை நாம் அழிக்க நினைக்கும் போது அதுவும் நம்மை அழித்துவிடுகிறது"என்ற கருத்தை உண்மையாக்கும்படி இங்கு உருவான எரிமைலை சீற்றங்களால் பலர் அழிந்தனர்,
வெப்பச்ச்சிர்குலைவும், கற்றழுத்த வேறுபாடுகளும் செவ்வாயின் பல மாற்றங்களை உருவாக்கின, தென் துருவப்பகுதியல் வாழ வகையின்றி செய்துவிட்டன எஞ்சியிருந்த எல்லோரும் வடதுருவத்திகு வந்துவிட்டோம், எஙகள் வாழ்க்கையை இயற்கையின் வழியிலேயே கொண்டுசெல்கிறோம், சூரிய ஓளியும், காற்றில் இருக்கும் சிலவகை தனிமங்களை உயர்அழுத்த திரவமாக்கியும்தான் எரிபொருளாக பயன் படுத்துகிறோம், ஆனால் அதே நேரத்தில் ஆராய்ச்சியிலும், தொழில்நுட்பத்திலும் மக்களுக்கு பயன்படும் வித்திலும் மட்டுமே கவனம் செலுத்துகிறோம்!இந்த இடத்தில் மக்கள் வளமாக வாழ வழி என்ன என்பதில்தான் எங்கள் கவனம் இருகிறது! மற்ற கோள்களில் யார் எப்படி இருக்கிறார்கள் என்பதில் அல்ல!என்ற செங்கதிரானிடம், இங்கு தவறுகளும், பிரசச்னைகளும், நோய்களும் இல்லையா என்று கேட்டதும்! இருக்கிற்து ஆனால் குறைவாக இருக்கிறது!தீர்க்ககூடியதாக இருக்கிறது என்றார்.
செவ்வாயை ஆராய நிறைய செயற்கை கோள்களை நாங்கள் அனுப்பியிருக்கிறோம் அதில் எதிலுமே இப்படி சூழல் இருப்பதாக தெரிய வில்லையே என்றான் ஜனா,எங்கள் எல்லைக்குள் எங்கள் அனுமதி இல்லாமல் யாரும் கண்காணிக்க கூட முடியாது!இந்த பகுதிக்கு வரும் எத்தனையோ செயற்கை கோள்களைஅதற்கே தெரியாமல் திசை மாற்றிவிடுவோம்,அல்லது செயலிக்கச்செய்து விடுவோம் என்றார் செங்கதிரான்! உங்கள் உலகை பார்க்கவேண்டும் என்று இருவரும் கேட்டபோது நாளை சிறப்பு விமானத்தில் சென்று பார்க்கலாம் போய் ஓய்வெடுங்கள்" என சொன்னவரிடம்! உங்களுக்கு எத்தனை வயது என்று கேட்டான் ஜனா, அதற்கு அவர் முப்பத்தி இரண்டு என்றதும்!பொய் சொல்லாதிங்க என்பது போல் சிரித்தான்! இது உங்கள் உலகமல்ல!.... செவ்வாய்!இங்கு ஒரு வருடத்திற்கு 687 நாட்கள்!(ஒருமுறை சூரியனை சுற்றிவர) என்று சொல்லி பதிலுக்கு சிரித்துவிட்டு சென்றார்
"அறைக்கு வந்ததும் உனக்கெப்படி தமிழ் தெரியும்" என்று கேட்டாள் பிபா(ஆங்கிலத்தில்)நம் ஆராய்ச்சி குழு விஞ்ஞானிகளில் இலக்கியன் என்று ஒரு விஞ்ஞானி இருந்தாரே அவர்தான் சொல்லிகொடுத்தார்,ஏதாவது புதிய விசயங்களை சொல்லிகொண்டே இருப்பார் நல்ல நண்பர்,தைழ் ஆர்வலர், இரவு பணியில் அவர்தான் அதிகம் இருப்பார் அதனால் நிறைய நேரம் கிடைத்தது ,இனிமையான மொழி, இன்று நம் உயிரைக் காப்பற்றியிருக்கிறது!பூமியில் இருக்கும் தமிழை விட இங்குள்ள தூய்மையாக கலப்பின்றி இருக்கிறது! விண்வெளிக்கு நான் எடுத்துவந்த புத்தகங்களில் சில தமிழ்ப்புத்தகங்கள் இருந்ததை பார்த்தாயா! அதில் "வலைபதிவில் கவிதைகள்"என்ற புத்தகத்தின் 27ம் பாகத்தில் எனக்கு பிடித்த சில கவிதைகள் சொல்கிறேன் கேட்கிறாய என்றான்! சரி என்று சொன்னவளிடம் மொழிபெயர்த்துச் சொல்லி !தூங்கு மூஞ்சியா இல்லாம நாளைல இருந்து நீயும் தமிழ் கத்துக்கோ என்றான்! இவர்கள் பேச்சு அங்குள்ள மைக்கில் பதிவாகிகொண்டிருந்தது!
செவ்வாயை சுற்றி பார்க்க நான்கு பேர் அமரக்கூடிய ஒரு சிறிய ரக காரை எடுத்து வந்தார்கள், அதில் ஏறி அமர்ந்ததும்,சில தெருக்களில் நகர்ந்து சென்றது, சில ஊர்களிலும், விவசாய நிலங்களின்மேலும் எட்டிபிடிக்கும் அளவிற்கு தாழ்வாக பறந்து இயற்கை காட்சிகளை ரசிக்கவைத்தது!சில நகரங்களில் மிக உயரத்தில் பறந்தது!"இப்படி பறப்பது பொருளீர்ப்பு விசையை கட்டுப்படுத்தும் தொழில் நுட்பம்" என்று பிபாவுக்கு விளக்கம் சொன்னான் ஜனா,சில இடங்களுக்கு நேரிலும் அழைத்துச் சென்றார் செங்கதிரான் இவர்களின் தலை முடியை எல்லோரும் ஆச்சர்யமாக பார்த்தார்கள்!
நேற்று செங்கதிரான் சொன்னது உண்மைதான், இங்கு மக்கள் வளமாகவே வாழ்கிறார்கள், இயற்கையை மதிக்கிறார்கள், பெண்ணடிமைத்தனம்,ஊழல், உயிர்கொல்லி நோய்கள்,போன்ற பிரச்சனைகள் இல்லை!
பண்பாடும் கலாச்சாரமும் செழித்து விளங்கியது! பிபாவுக்கு இந்த உலகம் மிகவும் பிடித்திருந்தது! செங்கதிரான் பூமியில் உள்ள தமிழ் நூல்கள் பற்றி கேட்டறிந்தார்,அங்குள்ள நூல்கள் பற்றியும் சொல்லிகொண்டிருந்தார்.சில நாட்கள் இவ்வுலகை அறியும் ஆவலிலேயே ஓடியது,அடுத்து என்ன செய்யப்போகிறொம் என்று தெரியாமல் ஜனா குழப்பத்தில் இருந்தான்,
பூமியில் "அராக்"அமைப்பு விஞ்ஞானிகள் எல்லொரும் இருவருக்கும் என்ன ஆயிற்று என தெரியாமல் குழப்பத்தில் இருந்தனர், பல நாடுகளும் அமைப்புகளும், ஆராய்சிக்காக பல உயிர்களை கொன்றுவிட்டதாக "அராக்"நாடுகளின் மீது குற்றம் சாட்டின!எல்ல மொழி பத்திரிக்கைகளிலும், வலைபதிவுகளிலும் இதுபற்றிய பெரும் விவாதம் நடந்துகொண்டிருந்தது!
செவ்வாயில்"நீங்கள் தப்பித்துச் செல்ல வாய்ப்பிருப்பதால் உங்களை அழிக்கச் சொல்லி பல உயர்மட்டக் குழுக்களில் இருந்து வற்புறுத்தல் வருகின்றன , "உங்களிடமுள்ள வானியல் துறையின் தொழில்நுட்பத்திறமையை எங்கள் உலகத்திற்காக பயன்படுத்துகள் உங்களை அழிக்க மாட்டோம் என்றார் செங்கதிரான்! நாம் தப்பித்து செல்ல நினைத்தாலும் கொன்றுவிடுவார்கள்,ஒருவேளை அப்படி தப்பிச்சென்றாலும் பூமியில் இன்னும் பல ஆராய்ச்சி செய்வார்கள் இன்னும் எத்தனையோபேர் உயிரிழக்க நேரிடலாம்" இங்கேயே வாழ்ந்துவிடுவோம் ஜனா"என்றாள், அவனுக்கும் இங்கேயே வாழ விருப்பம் வந்ததால் சம்மதித்தான்!
தலைமை விஞ்ஞானி செங்கதிரோன் உதவியுடன்,தகவல் சாதனங்க்களை பெற்று மீண்டும் "மார்ஸ் பைண்டர்" விண்கலத்திற்கு சென்று பூமிக்கு இணைப்பு கொடுத்துசில புகைப்படஙகளை அனுப்பிவிட்டு "செவ்வாய் தன் சுற்றுப்பாதையில் சூரியனுக்கு மிக அருகில் வருவதால் வெப்பம் அதிகரித்துகொண்டே வருகிறது தற்காலிக பனிப்பறைகளில் இருக்கும் கார்பன்டை ஆக்சைடு அதிக அளவில் ஆவியாகிகொண்டு அழுததம் இப்போதே 20% அதிகரித்துவிட்டது கவச உடைகளை தாண்டி மூச்சுத்திணறல் ஏற்படுகிறது,இன்னும் அதிகரிக்கும் எனபதால் அடுதத சிலமணி நேரங்களில் நாங்கள் உயிரிழக்க நேரிடலாம், இனியும் இதுபோன்ற உயிர் விரோத ஆராய்ச்சிகளை தொடராதீர்கள்" என வேண்டுகோள் விடுத்தபடி பிபாவும், ஜனாவும் அழுவதுபோல் விண்கலம் முன் நின்று புகைப்படம் எடுத்து அனுப்பிவிட்டு, பூமியுடனான இணைப்பை துண்டித்தான்! புதியக உலகத்தில், புதிய வாழ்க்கை வாழப்போவதை எண்ணி மகிழ்ச்சியில் மிதந்துகொண்டிருந்த ஜனாவை முத்தத்தால் மூழ்கடித்துக்கொண்டிருந்தாள் பிபா!
6 comments:
// இயற்கையை பற்றி யாராலும் முழுமையாக ஆராய்ச்சி செய்ய முடியாது தம்பி!அது நாமாக உவாக்கும் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டது //
அருமை அருமை அருமை
கதை மிகவும் நன்றாக இருந்தது.
நன்றாக எழிதிவுள்ளீர்கள்.
கதைக்குள் தமிழ் புகுந்தவுடன், படிக்க படிக்க சந்தோசமாக இருந்தது. இப்படி இருந்துன்ன எப்படி இருக்கும்? நினைக்கவே சந்தோசமா இருக்குது.
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நட்புடன்
--மஸ்தான்.
கதை பல இடங்களில் நன்றாகவே பயணிக்கிறது. ஆனால், இவ்வளவு பெரிய கதையை, சிறுகதையாக்க முயற்சித்ததால், பல இடங்களில் ஆயாசம் வருகிறது. குறுந்தொடராகவோ/நாவலாகவோ எழுதியிருக்கலாம்!!
((((((நன்றாக எழிதிவுள்ளீர்கள்.
கதைக்குள் தமிழ் புகுந்தவுடன், படிக்க படிக்க சந்தோசமாக இருந்தது. இப்படி இருந்துன்ன எப்படி இருக்கும்? நினைக்கவே சந்தோசமா இருக்குது
பாராட்டுக்கு நன்றி மஸ்தான்! நிஜத்தில் அப்படி இருந்தால் மிக மிக சந்தோசமான விசயம்தான்))))
very good.
நன்றி நண்பரே
(((((((இவ்வளவு பெரிய கதையை, சிறுகதையாக்க முயற்சித்ததால், பல இடங்களில் ஆயாசம் வருகிறது. குறுந்தொடராகவோ/நாவலாகவோ எழுதியிருக்கலாம்!!))))))))))))
உண்மைதான், நல்ல ஆலோசனை சொல்லி யோசிக்க வச்சுட்டீங்க! இனி இன்னும் சிறப்பாக எழுத முயற்சி செய்கிறேன்!
Post a Comment