Friday, October 14, 2011

மனிதர்களுக்கான மழை! - கவிதை

மனிதர்களுக்கான மழை
நிறுத்தப்பட்டு,
ஆண்டுகள் பல ஆகிவிட்டன!

இப்போது பெய்வதெல்லாம்,
மரங்களுக்கும் 
விலங்குகளுக்குமான மழைதான்!
அதனையும் அழித்துவரும் மனிதர்களே!

"உலகம் நீரில் அழியும்" என்ற
கடவுளின் கடைசி அத்தியாயத்தை
மாற்றி எழுதிக்கொள்ளுங்கள்!
"உலகம் நீரின்றி அழியும்!"

12 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//மாற்றி எழுதிக்கொள்ளுங்கள்!
"உலகம் நீரின்றி அழியும்!"//

அருமையான எச்சரிக்கை தான்.
பாராட்டுக்கள்.

ஷைலஜா said...

கடைசி வரியில் உலுக்கி விட்டீர்களே மனசை.... நல்ல கவிதை இது

இராஜராஜேஸ்வரி said...

மாற்றி எழுதிக்கொள்ளுங்கள்!
"உலகம் நீரின்றி அழியும்

பதறவைக்கும் எச்சரிக்கை பகிர்வு.

ஹேமா said...

மழையில் நனைந்த ஆதங்க வார்த்தைகள் !

ShankarG said...

மழை பற்றிய தங்கள் கவிதை உண்மையை அழுந்தச் சொல்கிறது. வாழ்த்துக்கள்.

Yaathoramani.blogspot.com said...

அருமையான படைப்பு
இதை ஒரு கவிஞனின் சாபமாகக் கூட கொள்ளலாம்
கவிதையில் அத்தனை அழுத்தம்
அருமையான படைப்பைத் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

நம்பிக்கைபாண்டியன் said...

ரசித்த நட்புள்ளங்களுக்கு நன்றிகள்!

அ. வேல்முருகன் said...

நன்னீரின்றி அழியும் என்று சொல்லுங்கள்

நம்பிக்கைபாண்டியன் said...

சரியாக சொன்னிங்க வேல்முருகன்! நான் மழையை(நன்னீர்)பற்றி எழுதியதால் அதை தனியாக குறிப்பிடவில்லை

நம்பிக்கைபாண்டியன் said...

சரியாக சொன்னிங்க வேல்முருகன்! நான் மழையை(நன்னீர்)பற்றி எழுதியதால் அதை தனியாக குறிப்பிடவில்லை

Thooral said...

மாற்றி எழுதிக்கொள்ளுங்கள்!
"உலகம் நீரின்றி அழியும்!"

வரிகளின் புதுமை தங்கள் படைப்பாற்றலை கூறுகிறது
வாழ்த்துகள்

நம்பிக்கைபாண்டியன் said...

jayaram thinagarapandian

கருத்துக்களுக்கு நன்றி நண்பரே!