Friday, November 11, 2011

நட்பு மழை! - படக்கவிதை

வெயிலும், மழையும்
எதிரிகளாகவே இருக்கின்றன!

வெயில் வலிமையாக
இருக்கும் பொழுதுகளில்
மேகங்களுக்குள்
 மறைந்துகொள்கிறது மழை!
மழை கடுமையாக
இருக்கும் பொழுதுகளில்
காணாமல் போகிறது வெயில்!

மழையின் சுவடுகளை
அழித்துச்செல்கிறது வெயில்
வெயிலின் காயத்திற்கு
மருந்திடுகிறது மழை!

வெயிலும் மழையும்
சந்திக்கும் 
அரிய மாலைப்பொழுதில் 
பூக்கிறது
வானவில் என்றொரு
அழகிய நட்பு!

!



10 comments:

நிலாமதி said...

இயற்கையை அழகாய் சொல்லிருகிரீர்கள்...

...பாராட்டுக்கள்.

Anonymous said...

வானவில் கவிதை நல்லாயிருந்தது...வாழ்த்துக்கள்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

//பூக்கிறது
வானவில் என்றொரு
அழகிய நட்பு!//

வானவில் போன்ற அழகான கவிதைக்குப் பாராட்டுக்கள். vgk

TNPSCGK Editorial Team said...

நல்லதொரு மழைக்கவிதை..!! வெயிலையும், மழையையும் தொடர்புபடுத்தி செல்லியவிதம் அருமை..!!

TNPSCGK Editorial Team said...

எனது வலையில் இன்று:

மாவட்டங்களின் கதைகள் - தூத்துக்குடி மாவட்டம்(Thoothukudi)

நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

Thooral said...

//வெயிலும் மழையும்
சந்திக்கும்
அரிய மாலைப்பொழுதில்
பூக்கிறது
வானவில் என்றொரு
அழகிய நட்பு!//

அருமையான வரிகள் ...
மழையும் வெயிலும் எதிரி தானோ என்று சற்று யோசிக்க வைக்கிறது

கீதமஞ்சரி said...

வாவ், பிரமாதம். பாராட்டுகள்.

பாலா said...

//மழையின் சுவடுகளை
அழித்துச்செல்கிறது வெயில்
வெயிலின் காயத்திற்கு
மருந்திடுகிறது மழை!

மிக மிக அருமையான வரிகள்...

அ. வேல்முருகன் said...

வானவில்லை பாராட்டுவதற்கு ஏன் வெயிலையும் மழையையும் எதிரிகள் என்றீர்கள்.
ஆம் கவிகள் பொய் சொல்லிதான் பாராட்டுவார்கள்

arasan said...

வரிகளை படித்து பிரமித்து போகிறேன் ..
தரமான படைப்புக்கு வாழ்த்துக்கள்