ஒரு உயிர் பிரிந்ததற்கான
எவ்வித வருத்தங்களுமற்று
எப்போதும்போலவே இருந்தது வீடு!
"டி.வி யில் மூழ்கியிருந்த மகள்
வாசலில் விளையாடும் மகன்
தண்ணீர் பிடிக்கும் மனைவி
சமைத்துக் கொண்டிருந்த அம்மா
செய்தித்தாள் வாசிக்கும்அப்பா!" என
யாருக்கும் அக்கறை இல்லை
என்று புலம்பியபடி
நானே எடுத்து
வெளியில் எறிந்தேன்
வீட்டிற்குள்
இறந்துகிடந்த எலியை!
எவ்வித வருத்தங்களுமற்று
எப்போதும்போலவே இருந்தது வீடு!
"டி.வி யில் மூழ்கியிருந்த மகள்
வாசலில் விளையாடும் மகன்
தண்ணீர் பிடிக்கும் மனைவி
சமைத்துக் கொண்டிருந்த அம்மா
செய்தித்தாள் வாசிக்கும்அப்பா!" என
யாருக்கும் அக்கறை இல்லை
என்று புலம்பியபடி
நானே எடுத்து
வெளியில் எறிந்தேன்
வீட்டிற்குள்
இறந்துகிடந்த எலியை!
5 comments:
கவிதை கலக்கல்..
கடைசி வரி வரும்வரை ஒருவித
கனத்த மன நிலையில்தான் படித்தேன்
கடைசி வார்த்தையை படித்ததும் என்னையும் அறியாது
சப்தமாகச் சிரித்துவிட்டேன்
கலக்கல் பதிவுதொடர வாழ்த்துக்கள்
உண்மைதான்.அதுவும் ஒரு உயிர்தானே.இனி இந்த மாதிரி நிகழ்வு நடந்தால் இந்தக் கவிதை ஞாபகத்திற்கு வரும் !
ஒரே பீலிங்க்ஸ் ஆ போச்சு பா..
kavithai super
நடந்த ஒரு நிகழ்வால்
மனம் பதைக்கும் ஒரு
நெகிழ்வு நெஞ்சை
அற்புதமாக சொல்லிவிட்டீர்கள் நண்பரே..
Post a Comment