Monday, February 19, 2007

என்னை சுற்றி

(உயர்ந்தோர் நட்பு உதவும்)

பனிரெண்டாம் வகுப்பு முடித்ததும் நான் கல்லூரி படிப்பேன் என்று நினைத்து பார்க்கவில்லை, படிக்க பணம் செலவாகும் என் வீட்டின் நிலமையோ அதற்குரிய வகையில் இல்லை,என்வே எந்த ஒரு கனவும் லட்சியமும் இல்லாமலே 12ம் வகுப்பை படித்தேன், கணிதப்பாடம் கவிழ்த்துவிட (படிச்சாதானே வரும்) அறிவியல் பாடங்கள் அனைத்திலும் 80% மதிப்பெண் பெற ,எப்படியாவது படிக்க வைக்கிறோம் நீ படி என்று சொல்லிவிட்டார்கள்
,
எங்கள் உறவினர் நண்பர் பிரபு என்ற ஒருவர் ஒரு கல்லுரியில் இரண்டாமாண்டு படித்துகொண்டிருந்தார் அவர் ஆலோசனைப்படி அந்த கல்லூரியில் விண்ணப்பித்தேன், இன்னொரு கல்லூரியில் வேதியியல் கிடைத்தது,வேதியியல் படித்தால் இருபாலர் கல்லூரி, இயற்பியல் படித்தால் ஆண்கள் மட்டும் படிக்கும் கல்லூரி எதில் சேர என்று குழப்பம் , வேதியலை விட இயற்பியல் எனக்கு படிக்க எளிது என்பதால் இயற்பியலில் சேர்ந்துவிட்டேன்,
பிரபு தான் எனக்கு கல்லூரியில் முதல் நண்பர் என்று சொல்லலாம் , எங்கள் கல்லுரியில் ராகிங் உண்டு அளவான முறையில், நாங்கள் அவர்கள் சொல்வ‌தை மறுக்காமல் செய்வோம், பிரபுவின் உதவியால் அவரின் வகுப்பில் நிறைய‌ மாண‌வர்களுக்கு அறிமுகமாகிவிட்டேன்,நேரம் கிடைக்கும்போது அவர்களின் அரட்டையில் கலந்துகொள்வேன்,சில‌ நண்பர்கள் சீனியரிடம் ஏதேனும் புத்தகம் வாங்க வேண்டுன்றால் என்னை அழைத்து செல்வார்கள்,அப்போது துறைவாரியாக கல்லுரிகளுக்கு இடையே ஒவ்வொரு கல்லுரியிலும் போட்டிகள் நடக்கும், நிறைய‌ கல்லுரிகளில் இருந்து வந்து கலந்துகொள்வார்கள், போட்டிகளில் அதிகம் இரண்டாமாண்டு மூன்றாமாண்டு மாணவர்கள் தான் கலந்து கொள்வார்கள், முதலாமாண்டு மாணவர்களை அழைக்க மட்டார்கள் , ஆனால் ஒரு கல்லுரியில் ந‌டந்த‌ போட்டிக்கு என்னை மட்டும் அழத்து சென்று .

5 பேர் கலந்து கொள்ளும் 6 நிமிட நாடகப்போட்டி என்னையும் சேர்த்துகொண்டார்க‌ள், பள்ளியில் பேச்சு, கட்டுரை போட்டியில் பங்கேற்றுள்ளேன், இங்குதான் முத‌ல்முறையாக‌ மேடையேறினேன்,சீனிய‌ர் மாண‌‌வ‌ரின் க‌ற்பனையில் உதித்த சின்ன ஸ்க்ரிப்ட், சிறப்பாக நடித்தோம். இரண்டாம் பரிசு கிடைத்தது
சிறிய நிகழ்வுதான் ,
ஆனால் என் வளர்ச்சிக்கு இது மிக பயனுள்ளதாக‌ இருந்த‌து,
மேடைகூச்ச‌ம் குறைய‌ உத‌விய‌து,
எப்ப‌டிப‌ட்ட‌ போட்டிக‌ளுக்கு எப்ப‌டி க‌ற்பனை செய்து ஸ்கிரிப்ட் தயாரிக்கவேண்டும் என்ற கற்பனை திற‌ன் வளர உதவியது
( இது நான் மூன்றாமாண்டு படிக்கும் போது பெரிய அளவில் வெற்றிபெற உதவியது)
இது போக படிப்பு ரீதியாகவும் ,மற்ற ஆசிரியர்களை ப‌ற்றியும் சிறு சிறு பிரசனைகளை எதிர்கொள்வது என்பதிலும் அவர்கள் பல வழிகளை சொல்லி கொடுத்தார்( ஆனால் நான் சரியா படிக்கல‌ங்க) இத‌ன் வ‌ழியாக‌ நான் தெரிந்துகொண்ட‌து என்ன‌வென்றால்
எங்கு சென்றாலும் நம்மை விட‌ உயர்ந்த நிலையில் இருப்பவர்களிடம் நல்ல!! நட்பை ஏற்படுத்திகொள்வது நல்லது,அது நம் வளர்ச்சிக்கு உதவும்.

இத‌ன்பிற‌கு நாங்க‌ள் ப‌ல போட்டிகளில் நம்பிக்கையுடன் ப‌ங்கேற்க செல்வோம் ,‌
நாட்டு நலப்பணி திட்ட 10 முகாமில் கிராமத்தில் தினமும் நாங்கள் கலை நிகழ்ச்சி நடத்த வேண்டும், அதற்கு உதவியது,
அப்போது வரலாற்று துறையை சேர்ந்த மிகத்திறமையான மாண‌வ‌ன் ச‌ங்க‌ர் என்ப‌வ‌னும் எங்களுட‌ன் க‌ல‌ந்துகொள்வான் , எங்களையும் அவன் போட்டிகளுக்கு அழைத்து செல்வான் ஆன‌ல் நாங்க‌ள் யாரும் அதில் தொட‌ர்ந்து ஆர்வ‌ம் செலுத்தாமல் இருந்துவிட்டோம் அவ‌ன் தொட‌ர்ந்து ஆர்வ‌ம் செலுத்தி , கமெடி பாய்ஸ் குழு நடத்தி, விஜ‌ய் டி.வி க‌ல‌க்கப்போவ‌து யாரு நிக‌ழ்ச்சியில் பிர‌ப‌ல‌மாகி, இன்று சினிமாவிலும் ந‌டித்துக்கொண்டிருக்கிறான், ம‌துரை "ரோபோ" ச‌ங்க‌ர்

1 comment:

N.Pradap Kumar said...

ரோபோ சங்கர் உங்கள் நன்பரா? அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை எனது சார்பில் சொல்லுங்கள். மிக நன்றாக எல்லா நிகழ்சிகளையும் நடத்தி தருகின்றார்.