Thursday, February 08, 2007

அன்பு

காத‌லனுடன் செல்கிறேன்
தேடவேண்டாம்! என்று
கடிதம் எழுதிக்கொண்டிருக்கையில்
"அதிகம் கண்விழித்து
உடல் நலத்தை கெடுக்காதே!
நாளை படிக்கலாம்
முதலில் தூங்கு!" என்ற
அம்மாவின்
குரலில் இருந்த
ஆழமான அன்பு!
சுக்குநூறாய் கிழித்தது
கண்ணீரில்
நனைந்த கடிதத்தை!

-- நம்பிக்கைபாண்டியன்

1 comment:

சுந்தர் / Sundar said...

அருமை ... வாழ்த்துக்கள்