என்னை சுற்றி
(வார்த்தைகளில் கவனம் வேண்டும்)
பள்ளிவாழ்க்கை நினைவுகள் எல்லோருக்குமே இனிமையானவை என்றுமே பசுமையானவை, நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது ஆசிரியர் சில நாட்களில் வகுப்பறைக்கு வெளியே மரநிழலில் வகுப்பு எடுப்பது வழக்கம், வகுப்பறையை விட மரத்தடியில் எல்லோருமே அதிக சேட்டைகள் செய்வோம்,"நாளை '5'வது பாடம் பரிட்சை வச்சுருக்னல எல்லோரும் அமைதியா படிங்கடா!"என்று சொல்லிவிட்டுபுத்தகம் படிப்பதில், மூழ்கிவிட்டார்,
சிலர் உண்மையாவே படித்துக்கொண்டிருந்தனர்,சிலர் புத்தகத்தை புரட்டிக்கொண்டு படிப்பது போல நடித்துக்கொண்டே மெதுவான குரலில் பேசிக்கொன்டிருந்தோம்,சிலர் தரையில் மண்ணை கிளறி விளையாடிக்கொண்டிருந்தனர், இன்னும் சிலரோ அங்கும் இங்கும் நடந்துசெல்லும் 11, 12 ம் வகுப்பு மாணவிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்(10 வகுப்பு வரை மாணவர்கள் மட்டும் படிக்கும் பள்ளி)
பள்ளி வாழ்க்கையின் சுவரஸ்யமான விசயங்களில் ஒன்று பட்டப்பெயர்கள், ஒவ்வொருவனுக்கும் அவனுடைய தோற்றம், பழக்கங்கள், குணம் ஆகியவற்றுக்கு ஏற்றது போல பட்டப்பெயர்கள் வைத்திருப்பார்கள், சில பெயர்களை கேட்டாலே சிரிப்பு வந்துவிடும் ,அப்படி இருக்கும் ,சொன்னால் பெரிய பட்டியலே இடலாம், ஒருவரை ஒருவர் பட்டப்பெய்ர் சொல்லி அழைக்கும் போது பல நெரங்களில் அது சாதாரணமாக எடுத்துக்கொண்டாலும் சில நேரங்களில் அது பெரிய சண்டையாகிவிடும்,
அன்றும் இதே போல வகுப்பில் ராஜா என்பவன் ஒருவனை பட்டப்பெயர் சொல்லி அழைக்க அது சண்டையாகிவிட்டது இருவரும் சண்டையிட்டுகொண்டனர் ஆசிரியர் புத்தகத்தில்(அரைத்தூக்கம்) மூழ்கி இருந்ததால் இதை கவனிக்கவில்லை, சண்டை பெரிதாகி விட்டது.
அவன் சண்டையிட்ட அதே ஆவேசத்துடன் எழுந்து ஆசிரியரிடம்"" சார், ராஜா என்ன அடிச்சுக்கிட்டே இருக்கான் சார், அவன முதல்ல அடிங்க சார், அப்பதான் சார் ஒழுங்கா இருப்பான்,நல்லா அடிங்க சார் அவனை!"" என்று சத்தமாக புகார் செய்தான், ஆசிரியர் அவர்கள் இருவரையும் அருகே அழைத்தார்,
அருகே வந்ததும் புகார் சொன்னவனின் சட்டையை பிடித்து 'பளார்! பளார்!' என கன்னத்தில் நாலு அறை கொடுத்துவிட்டு "ஏண்டா நான் என்ன உனக்கு வச்ச அடியாளா? நீ சொல்லுரவன எல்லாம் அடிகிறதுக்கு, என்ன நினைச்சுட்டு இருக்க மனசுல, பரிட்சைக்கு படிக்க சொன்னா படிக்காம சண்டையா போடுறீங்க!முட்டி போடுங்கடா ரெண்டு பேரும்"" என்று சொல்லிவிட்டு மீண்டும் புத்தகத்தில் முழ்கிவிட்டார்,
பாவம்அவன் புகார் சொல்லபோய் அடிவாங்கியதுதான் மிச்சம்,இதை இப்போதும் நண்பர்கள் ஒன்று சேரும்போது சொல்லி சிரிப்போம்,அவன் அடிவாங்கியதற்கு காரணம். அவன் பயன்படுத்திய வார்த்தைகளும், ஆவேசத்தில் அவன் அதை உச்சரித்தவிதமும்தான், ஆசிரியர் அதை தவறாக புரிந்துகொண்டார், எனவே எப்போதுமே, யாரிடம் பேசுகிறோம்! என்ன பேசுகிறோம்!என்று சிந்திக்காமல், அவசரமாக ஆவேசத்தில் தவறான வார்த்தைகளை பயன்படுத்தினால், அது நம்மை மேலும் சிக்கலில் ஆழ்த்திவிடும்!
1 comment:
அது ஒரு அருமையான பதிவு பாண்டியன், இன்னும் எழுதுங்கள், வாழ்க வளமுடன்,
ஸ்ரீஷிவ்..
Post a Comment