அழகுஅழகிய விதமாய்
தலை வாரவில்லை!
புருவத்தின் இயல்பை
சீர் செய்யவில்லை!
உதட்டிற்கு சிவப்பு
சாயமிடவில்லை!
முகத்திற்கு அழகூட்ட
எதுவும் பூசவில்லை!
கழுத்திலும் உடலிலும்
ஆபரணங்கள் இல்லை!
விலைஉயர்ந்த நாகரீக
ஆடையுமில்லை!
கையில் மணிகாட்டும்
கடிகாரமில்லை!
காலில் எந்த
காலணியுமில்லை!
ஆனாலும்
அழகாய் இருக்கிறது
குழந்தை!
~நம்பிக்கை பாண்டியன்
1 comment:
thamizhmanam.com இல் இணையுங்களேன் உங்கள் பதிவுகளை. அருமையான படைப்புகளாக எழுதியுள்ளீர்கள்
Post a Comment