எண்ணங்கள் அழகானால்...
காலம் ஒருநாள் மாறும்! நம் கவலைகள் யாவும் தீரும்!
Wednesday, October 03, 2007
அற்புத கடிகாரம்!
அவசிய வேலைகளால்
அதிகாலை எழுவதற்கு
அலாரம் வைத்த
அன்றைய உறக்கத்தில்!
அலட்சியம் செய்த
அத்தனை முறையும்!
அக்கறையாய் ஒலித்து
அன்புடன் எழுப்பியது!
அம்மா எனும்,
அற்புத கடிகாரம்!
~நம்பிக்கைபாண்டியன்
Tuesday, October 02, 2007
மறைந்த காதல்!
சரியா? தவறா?
எப்படி கேட்பது?
என்ன நினைப்பார்கள்?
என்ற தயக்கத்தில்
எனக்குள் தோன்றி
எனக்குள்ளேய
மறைந்து போன
சில கேள்விகளைப் போல்!
உன்மேல்
நான் கொண்ட
காதலும் ஆனதடி(டா)!
nambikaipandian@gmail.com
~
நம்பிக்கைபாண்டியன்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)