Sunday, March 28, 2010

அங்காடித்தெரு! (விமர்சனம்)


அங்காடித்தெரு! (விமர்சனம்)

பெரிய ஜவுளி கடைகளில் பணிபுரியும் பணியாளர்களின் சங்கடங்களையும் அவர்களிடையே வரும் காதல் உணர்வுகளின் யதார்தத்தையும் ரசித்து உணரும்படி படமாகி த‌ந்து இருக்கிறார் இயக்குநர் வசந்தபாலன்.

குடும்ப வறுமை காரணாமாக நல்ல மதிப்பெண் எடுத்திருந்தும் படிப்பை தொடர முடியாமல் திருநல்வேலி மாவட்டத்திலிருந்து வேலைக்கு வருகிறார் நாயகன்(லிங்கம், இதே போல் திருச்செந்தூரில் இருந்து வேலைக்கு வருகிறார் நாயகி(கனி).சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் இருக்கும் பிரமல கடையில் பணிபுரியும் இருவரும் மோதலில் துவங்கி காதலகிறார்கள், இந்நிலையில் கடையில் பணிபுரியும் இன்னொரு காதல்ஜோடியின் சோகமான‌ முடிவும், கடை நிர்வாகத்தின் கடுமையான கட்டுப்பாடுகளும் இவர்களை பாதிக்கிறது, அதிலிருந்து மீண்டு பல்வேறு பிரச்சனைகளுக்கு பின் எப்படி இணைகிறார்கள் என்பதே படத்தின் கதை.
ரங்கராதன் தெருவும் அங்கு பணிபுரிவர்களின் வாழ்க்கை முறையும் நம்மை அவர்களுடைய உலகத்திற்கே அழைத்துச்செல்கிறது,முதல்பாதி நகைச்சுவையுடனும் இரண்டாவது பாதி சற்றே சோகத்துடனும் இறுதிவரை தொய்வின்றி நம்மை இணைத்துச்செல்கிறது அழுத்தமான திரைக்கதை.

>கண்டதும் காதல் என இல்லாமல் யதார்தமான காதலை உருவாக்கி உண்மையான காதலை உயர்த்தி சொல்லியிருப்பது.
>நாயகணும் நாயகியும் அவரவர் பள்ளிப்பருவத்து காதல் சிர்த்துக்கொண்டே பரிமாறிக்கொண்டு நம்மை சிரிக்க‌ வைப்பது,
>பணி புரியும் இடங்களில் பெண்களுக்கு வரும்் பாலியல் தொந்தரவுகளை சுருக்கென்று உணரும்படி சொல்லியிருப்பது.
>பிச்சைக்க்கர பெண்மணியின் குள்ளக்குழந்தை வசனம்.
> குடும்பத்துடம் பார்க்கும் படியாக இரு காதல் கதையை படமக்கி இருப்பது.

> எந்த காட்சியையும் தேவையற்று திணிக்காமல் அனைத்து பாத்திரங்களையும் கதையோட்டதுடன் இணைத்து செல்வது(உதாரணம்: சினேகா, விளம்பர சூட்டிங் பலவித ஆடைகளில் பூட்டிய கடைக்குள் டூயட் பாடுவது )> முதல் பாடலை காட்சிப்படுத்திய நிகழ்வுகள்,சிறிய பாடல்கள்
> தொழிளார்களின் பிரச்சனைகளை முதலாளிகளுக்கு உணர்த்தி இருப்பது,
> நம்மியும் மீறி கண்கலங்க வைக்கும் அழுத்த‌மான காட்சிகள்

இதுபோல் இன்னும் பலகாரணங்களுக்காக இயக்குனரை பராட்டிக்கொண்டே இருக்கலாம்.

நாயகியின் தங்கையாக வரும் சிறுமி,வியாபார நோக்கோடு இருக்கும் முதலாளி அண்ணாச்சி, மேலாளர்(வில்லன்) கருங்காலி, புதுமுகங்களாக வ்ரும் பலரும் எளிதில் மனதில் பதிகிறார்கள்,புதுமுக நாயகன்(மோகன்)கதைக்கு நன்றாக பொருந்துகிறார், நாயகி அஞ்சலி மேக்கப் இல்லாத முகதுடன் துறு துறு மற்றும் சோக முக நடிப்பால் மனதை அள்ளுகிறார்,நாயகனின் நண்பனாக நம்மை சிரிக்க வைக்கும் கனா கானும் காலங்கள் பாண்டி
ஜெயமோகனின் வசனங்கள் ஆழமாக பாய்ந்து கைதட்டல் பெறுகின்றன, பிரகாஷ்குமார் & விஜய் ஆண்டனியின் இசையில் பாட‌ல்கள் அருமை ரிச்சர்ட்டின் ஓளிப்பதிவும்,பிண்ணனிஇசையும் படத்திற்கும் நமக்குமான இடைவெளியை குறைத்து காட்சிகளுடன் ஒன்ற உதவுகிறது

குறைகளை தேடிக்கொண்டிருக்காமல் நிறைகளை சொல்லி விமர்சிப்பதற்கு தகுதியான படம்."வெயில்" படத்திற்கு பின் இயக்குனரின் நான்கு வருட உழைப்பிற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது, சினிமாவின் பொக்கிஷங்களில் இதுவும் ஒன்று, நம்மை சுற்றி இருப்பவர்களிடமிருக்கும் கதைகளை படமாக்கி தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தும் இயக்குனர்களின் வரிசையில் தன்னை மீண்டும் நிரூபித்திருக்கிறார் இயக்குநர் வசந்தபாலன்.

இனி நீங்கள் ரங்கநாதன் தெருவிலோ பிரபல கடைகளிலோ செல்லும் போது நீங்கள் வாங்க வேண்டிய பொருட்கள் மட்டுமில்லமல் இந்த படமும் ஒரு முறை நினைபில் வந்து செல்லும். இதையே இப்படத்திற்காக வெர்றியாக கருதலாம்

அங்காடித்தெரு! அருமையான கதைக்கரு! அழகான திரை உரு!