Monday, February 19, 2007

பட்டாசுக்காதல்

ராக்கெட்

உ ன் க‌ண்க‌ளின்
பார்வைத் "தீ" பற்ற‌ வைத்த
காதல் நெருப்பில்!
உற்சாகமாய் வானில் பறந்தேன்!
தீபாவாளி ராக்கெட்டைப்ப போல!
விரைவில், வெடித்து
சிதறப்போவது தெரியாமல்!மத்தாப்பு

நீ!
ரசிக்கிறாய் என்பதற்காக
‌என்னை கம்பி மத்தாப்பாக!
எரித்துக்கொண்டேன்!
எரிந்து முடித்ததும்!
வீதியில் வீசியெறிந்துவிட்டாய்!அணுகுண்டு

ஊசி வெடிக்கு
பயந்து நடுங்கியவள்!
என் இதயத்திற்கு
அணுகுண்டு வைக்கும்போது!
கவலையின்றி
சிரித்துக்கொண்டிருந்தாள்!

No comments: