Wednesday, November 02, 2011

எதிர்வினை - சிறுகதை (வம்சி சிறுகதை போட்டிக்கு)


   எதிர்வினை - சிறுகதை                              
                             ராஜேஷ் அவனது அறை நண்பர்களிடம் "இன்று இரவு என் பார்ட்டி, எல்லா செலவும் என்னுடையது" என்றவுடன் என்ன காரணம் என்று அனைவரும் கேட்டனர். "கடந்த ஒரு மாதாமாக போனிலேயே பேசிக் பஸ்டாப்பிலேயே சந்தித்த அந்த பெண்ணை நாளை நேரில் சந்திக்கப்போகிறேன். அவள் வீட்டில் யாருமில்லையாம் வரச்சொன்னாள்,நாளை என் அலுவலகத்திலும் லீவ் சொல்லிவிட்டேன்  நாளை முழுவதும் ஒரே ஜாலிதான்" என்று கண்சிமிட்டினான் ராஜேஷ்.

                               ராஜேஷ் பிரபல நிறுவனத்தில் உதவி மேலாளர் பொறுப்பில் இருக்கும் 27 வயதும், எடுப்பான தோற்றமும், சாமர்த்தியமான பேச்சும் க் இளைஞன். அவனுக்கு கீழ் இருப்பவர்களின் அன்றாட பணிகளை ஒருங்கிணைத்து மேலாளரிடம் சமர்பிப்பது மட்டுமே அவன் பணி, சில மணிநேரம் மாலை நேரத்தில் மட்டுமே வேலை இருக்கும், மற்ற நேரங்களில் கம்ப்யூட்டரிலும் செல்போனிலுமே அதிகம் மூழ்கியிருப்பான், இணையதள சாட்டிங்கில் சந்திக்கும் பெண்கள், சில நேரங்களில் ராங் நம்பர்களில் கிடைக்கும் பெண்கள், என அனைவரிடமும் பேசி எளிதில் நண்பனாகி விடுவான், அவர்களின் மனப்போக்கை அறிந்தபின்  சற்று பலவீனமானவர்களை தன்வசப்படுத்தி "காரியம்" சாதித்துக்கொள்வான், பிறகு அவர்களை தவிர்த்து விட்டு அடுத்த முயற்சியில் இறங்கிவிடுவான்.

                                                     "எப்படி உன்னால் மட்டும் இப்படி பெண்களை எளிதில் உன் வலையில் வீழ்த்த முடிகிறது? உனக்கு எங்கேயோ மச்சம் இருக்குடா!" என்றான் குமார். "கொடுத்துவச்சவண்டா நீ வாழ்ந்தால் உன்ன மாதிரி வாழனும் "என்றான் குரு ராஜேஷ் பெருமிதத்தில் சிரித்துக்கொண்டிருந்தான் . "ரொம்ப புகழாதிங்கடா அவன் செருப்படி வாங்கிய கதை எல்லாம் எனக்குதான் தெரியும், முதலில் எச்.ஐ,வி. டெஸ்ட் செய்ய வேண்டும் இவனிடம்" என்றான் சந்தோஷ். "இது உன் வாழ்வில் அடிக்கடி நடப்பதுதானே  அப்புறம் என்னடா புதுசா இதுக்காக பார்ட்டி என்றனர் அனைவரும். "பாதுகாப்பாக தவறுகள் செய்யும் போது பயப்படத்தேவையில்லை" என தன் தவறை  நியாயபடுத்தினான் ராஜேஷ்!

                               "இது என் வாழ்வில் நான் அடையப்போகும் 25 வது பெண் அதனால்தான் இந்த வெள்ளி விழா பார்ட்டி என்றவனிடம் "இதையும் கூட குறித்து வைப்பாயா" என்று கிண்டலடித்துக்கொண்டே பார்ட்டியை ஆரம்பித்து  உற்சாகபானத்தில் மிதந்து கொண்டிருந்தனர், 
                                                                                    "எனக்கென்னவோ நீ இப்படியே தவறான வழியில் போய்க்கொண்டிருப்பது நல்லதில்லை எனத் தோன்றுகிறது" என்று வழக்கம் போல  அறிவுரையை ஆரம்பித்தான் சந்தோஷ்.  ராஜேஷ் சிரித்துக்கொண்டே "நல்லவனவே இருந்து என்ன சாதிக்கப்போகிறோம் இறந்த பிறகு சிலையா வைக்கப்போகிறார்கள், இருக்கும் வரை சந்தோசமாக வாழ்ந்துவிட்டு போய் விடவேண்டும்! மாட்டிக்கொள்ளாமல் தவறு செய்வதில்தான் நம் சாமர்த்தியம் இருக்கிறது! சரியா, தவறா என்பது பற்றி எல்லாம் கவலைப்படக்கூடாது" என்று அவன் அறிவுரைக்கு முற்றுப் புள்ளி வைத்தான்.

                                               மறுநாள் காலை அவளுடைய வீட்டிற்கு அருகில் சென்ற அவளுக்கு பல முறை போன் செய்தான் அவள் எடுக்கவில்லை,  என்ன செய்யலாம் என யோசித்திக்கொண்டே பக்கத்து சாலையில் இருந்த கடையில் சிகரெட் ஒன்றை வாங்கி பற்றவைத்து, ஒரு டீயை வாங்கி குடித்துவிட்டு அரை மணி நேரம் கழித்து "செல்லக்குட்டி" என்ற பெயரில் சேமித்த அவள் எண்ணிற்கு மீண்டும் அழைத்தான் , அழைப்பை ஏற்று தான் முக்கிய வேலையில் இருப்பதாகவும் அரைமணி நேரம் கழித்து மீண்டும் தானே அழைப்பதாகவும் கூறினாள்! அதே கடையில் நின்று மேலும் இரு சிகரெட்டுகளையும் ஒரு டீயையும் காலிசெய்தான், 
                                                    ஒரு மணி நேரத்திற்கு பிறகு அவளாகவே போனில் அழைத்து " இன்று வேண்டாம் ,நீ புறப்படு! இன்னொரு நாள் நானே சொல்கிறேன், இரண்டு நாட்களுக்கு போன், sms என எதுவும் செய்யாதே, என் சூழ்நிலை சரியில்லை" என்று சொல்லி இணைப்பை துண்டித்தாள், மிகுந்த ஏமாற்றத்துடன் அருகில் இருந்த தியேட்டரில் ஒரு படத்தை பார்த்து,மாலை கடற்கரை சென்று , இரவு பாரில் நன்கு குடித்துவிட்டு அறையில் வந்து   தூங்கிவிட்டான். 
                                                       அடுத்த நாள் காலை தாமதமாக எழுந்ததால் அவசரமாக அலுவலத்திற்கு புறப்படும்போது நான்கு போலீசார் வீட்டிற்குள் வந்தனர்.  "நேற்று நடந்த கொலைக்கும் உனக்கும் தொடர்பு இருப்பதால் உன்னை கைதுசெய்கிறோம் " என்றபடி கையில் விலங்குடன் நின்றிருந்தார் இன்ஸ்பெக்டர் . என்ன கொலை என்று கேட்டபோது  அருகிலிருந்த அன்றைய செய்திதாளை எடுத்து என் கையில் கொடுத்தார் இன்ஸ்பெக்டர் அதில் " சென்னையில் இளம்பெண் கொடூரகொலை, கொலை செய்த கணவன் தற்கொலை "என்றபெயரில் இருந்த செய்தில் நேற்று தன் வீட்டுக்கு வரச்சொல்லி ஏமாற்றி அனுப்பியவள் பிணமாக கிடந்தாள். ராஜேசிடம் அவன் செல்போனை வாங்கிய இன்ஸ்பெக்டர் அதிலிருந்த  "செல்லகுட்டி" எண்ணையும் அந்த எண்ணுக்கு அனுப்பப்பட்ட & பெறப்பட்ட sms கலையும் பார்த்த்உ முகம்சுழித்தார், 

                                                பின் அவனிடம் "அவளை கொலை செய்த கணவன் "அவளுடைய கொலைக்கும் என் தற்கொலைக்கும் காரணம்  அவளுடைய சில கள்ளக்காதலர்கள்தான்" என் கடிதம் எழுதிவைத்து தற்கொலை செய்துள்ளான். அவளுடைய செல்போனை வைத்து நாங்கள் விசாரித்த வரையில் கடந்த ஒரு மாதமாக நீதான் அவளுடன் அதிகம், தொலைபேசி மற்றும் sms வழியாக பேசியிருக்கிறாய், நேற்று கொலைசெய்யப்படுவதற்கு சற்று முன் வரை அவளுக்கு வந்த , மிஸ்டு கால், டயல்டுகால், ரெசிவ்டு கால் அனைத்தும் உன்னுடைய எண்தான், நேற்று முழுவதும் நீ அலுவலகத்திற்கும் செல்லவில்லை, அவள் வீட்டருகே இருந்த கடையில் இரண்டுமணி நேரமாக இருந்திருக்கிறாய்" கொலையை நீ செய்யாவிட்டாலும் அவள் கொலைசெய்யப்படுவதற்கு நீதான் முக்கியகாரணமாக இருந்திருக்கிறாய், இனி தண்டனையிலிருந்து தப்பிக்கவே முடியாது ராஜேஷ்" என்றபடி  கையில் விலங்கை மாட்டினார் இன்ஸ்பெக்டர்.

                                                   " செய்த தவறுகளில் இருந்து தப்பித்தாக பெருமைப்படும் ஒருவன், ஒரு நாள் செய்யாத தவறால் பாதிக்கப்படும்போது நிச்சயம் வருத்தப்படுவான்" என்று எப்போதோ சந்தோஷ் சொன்ன அறிவுரை நினைவுக்குவர, கதறி அழ ஆரம்பித்தான்.



6 comments:

ஷைலஜா said...

எதிர்வினை என்பதைவிட தன்வினை என்னும் தலைப்பு கூட பொருத்தமா இருக்கலாம். கடைசி பாரா தேவையே இல்லை என்பது என் கருத்து.
அவன் முக மாறுதலைச்சொல்லி முடிக்கலாம்.. நல்ல கரு கொண்ட கதை வெற்றிக்கு வாழ்த்து!

அ. வேல்முருகன் said...

வெற்றிக்கு வாழ்த்துக்கள்

நம்பிக்கைபாண்டியன் said...

ஷைலஜா said...
எதிர்வினை என்பதைவிட தன்வினை என்னும் தலைப்பு கூட பொருத்தமா இருக்கலாம். கடைசி பாரா தேவையே இல்லை என்பது என் கருத்து.
அவன் முக மாறுதலைச்சொல்லி முடிக்கலாம்.. நல்ல கரு கொண்ட கதை வெற்றிக்கு வாழ்த்து!

கருத்துக்களுக்கு நன்றிங்க ஷைலஜாக்கா!

நீங்கள் சொன்னதும் நல்ல தலைப்புதான், சமீபத்தில் யுடான்ஸ் கதைக்கு "வினை" என்று பெயர் வைத்த அதன் பாதிப்பில் "எதிர்வினை" என்று வைத்துவிட்டேன்.

இந்த கருத்தை முதலில் கதையில் இடயில் வருவது போல் எழுதியிருந்தேன், பிறகு கடைசியில் மாற்றிவிட்டேன், கொஞ்சம் ஒட்டாமல் தனித்து தெரிகிறது!

அ. வேல்முருகன் said...
வெற்றிக்கு வாழ்த்துக்கள்

நன்றிங்க வேல்முருகன்.

உலக சினிமா ரசிகன் said...

“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

சி.பி.செந்தில்குமார் said...

கதை நல்லா இருக்கு பரிசு பெற வாழ்த்துக்கள்

Thooral said...

கதை அருமை ...
நிகழ் கால சூழலை மையபடுது எழுதிய நல்ல கதை..
வெற்றி பெற வாழ்த்துக்கள்