Saturday, November 05, 2011

கவிதைகளாகவும் இருக்கலாம்! 2 - படக்கவிதை

1

சுவையான உணவை
எங்கு உண்டாலும்
உடனே வந்துவிடுகிறது
அம்மாவின் நினைவு!

2

ஹைக்கூ!

என்ன மகிழ்ச்சியோ
எங்கு விழுந்தாலும்
துள்ளிக் குதிக்கின்றன
மழைத்துளிகள்!

3

நெடுந்தூரம் பறந்துவரும்
பறவைகளின் ஓய்வுக்காகவே
ஆங்காங்கே காத்திருக்கின்றன
சில ஒற்றை மரங்கள்!






15 comments:

rajamelaiyur said...

//என்ன மகிழ்ச்சியோ
எங்கு விழுந்தாலும்
துள்ளிக் குதிக்கின்றன
மழைத்துளிகள்!
//
அருமையான வரிகள்

vettha.(kovaikavi) said...

நல்ல வரிகள் அனபுறவே. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

பாலா said...

கவிதைகள் அனைத்துமே சூப்பர். அம்மா பற்றிய கவிதை நிதர்சனம். ஒற்றை மரங்களும் இனி காணாமல் போய் விடுமோ?

சாகம்பரி said...

மழைத்துளி கவிதை பார்க்கவும் படிக்கவும் மிக அழகு.

curesure Mohamad said...

பாராட்டுக்கு நன்றி நண்பரே

நிலாமதி said...

அழகான தொகுப்பு ..பாராட்டுக்கள் ...உங்கள் பெயருக்குமுன் உள்ள நம்பிக்கை வெகுதொலைவுக்கு நல்வழிகாட்டிச் செல்லும்.

அ. வேல்முருகன் said...

என் போன்ற ஊர் சுற்றிகளுக்கு எப்போது வீட்டு சாப்பாடு கிடைக்கும் என தோன்றும்.

அ. வேல்முருகன் said...

என் போன்ற ஊர் சுற்றிகளுக்கு எப்போது வீட்டு சாப்பாடு கிடைக்கும் என தோன்றும்.

மகேந்திரன் said...

குறுங்கவிதைகள் அத்தனையும்
மனதில் கொஞ்சி விளையாடுகின்றன நண்பரே.

மாலதி said...

இந்த கவிதை எழுது கிறவர்கள் எந்த மை கொண்டு எழுதுகிறார்கள் என புரியவில்லை நானும் எல்லா மைகளையும் பயன் படுத்தி பர்த்து விட்டேன் இப்படி வரவில்லை பாராட்டுகள் நன்றி சிறந்த ஆக்கம் தொடர்க

Thooral said...

என்ன மகிழ்ச்சியோ
எங்கு விழுந்தாலும்
துள்ளிக் குதிக்கின்றன
மழைத்துளிகள்!

மிகவும் அருமை நண்பரே

ஹேமா said...

அம்மாவை நினைக்கவைக்கும் வரிகள் என்னைக் கலங்க வைத்துவிட்டது !

Unknown said...

மழைத்துளிகள் கவிதை எனக்கும் பிடித்துப் போனது நண்பரே! வாழ்த்துக்கள்.

நம்பிக்கைபாண்டியன் said...

படித்து ரசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்!

கீதமஞ்சரி said...

ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் ரசனையை வெளிப்படுத்தி எம்மையும் ரசனையில் ஆழ்த்துகின்றன. பாராட்டுகள்.