Sunday, March 04, 2012

சில பெண்ணியவாதிகள் - கவிதை

ஒழுக்க
குணங்களுக்கு பெயர்
அடிமைத்தனம்!

ஆபாசமின்றி
ஆடை உடுத்தச் சொன்னால்
ஆணாதிக்கம்!

அருவருப்பின்றி
கவிதை எழுதச் சொன்னால்
அடக்குமுறை!

சட்டங்கள்
பாதுகாப்பதற்கல்ல
பழிவாங்குவதற்கே!

அர்த்தங்கள்
மாறிவருகின்றன
சில பெண்ணியவாதிகளின்
அகராதிகளில்!

குறிப்பு: - பெண்களின் உரிமைக்காக உண்மையாக குரல் கொடுக்கும் பல சிறந்த பெண்ணியவாதிகளை பெரிதும் மதிக்கிறேன், ஆனால் சிலரோ, சில பெண்களின் அர்த்தமற்ற ஆணவத்தையும், தவறுகளையும் பெண்ணியம் என்ற போர்வைக்குள் மறைக்கின்றனர் (நியாயப்படுத்துகின்றனர்), அதில் எனக்கு உடன்பாடு இல்லை அந்த சிலருக்காக எழுதப்பட்டதே இந்த கவிதை!



10 comments:

பாலா said...

நீங்கள் சொல்வது உண்மைதான் நண்பரே. அதிலும் அதை ஒரு ஆண் சொல்லிவிட்டால் நிலைமை அவ்வளவுதான்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஏற்புடையதே...

கபிலன் said...

சூப்பர் சார்.!

பெண்ணடிமை ,பெண் சுதந்திரம், இது புரியுது ஓகே. இதுக்கெல்லாம் போராட்டங்கள் நடத்தினாங்க. வெற்றியும் கண்டாங்க.

அடுத்து புதுசா இது பெண்ணியம். அப்படின்னா என்னான்னு எனக்கு தெரிஞ்சு யாரும் சொல்லல. என்னைப் பொருத்த வரை பெண்ணாதிக்கம் என்ற பெயர் களங்கம் விளைவிக்கும் என்பதால், பெண்ணியம் என்று ப்ராண்ட் கொடுத்திருக்காங்க.

சுயவிளம்பரப் பெண்கள்
விடும்
புளிச்ச ஏப்பம் ..
-- பெண்ணியம்

Marc said...

எல்லாம் மாற வேண்டும் நன்மை மட்டும் விளைந்திட வேண்டும்

அருமைக்கவிதை வாழ்த்துகள்

ஹேமா said...

நான் பெண்ணாய் இருந்தும் ஒத்துக்கொள்கிறேன்.சில பெண்கள் சுதந்திரமாய் எழுதுகிறோம் என்கிற பெயரில் ஆபாசங்களை மட்டுமே எழுதுகிறார்கள்.அது மட்டும் பெண் சுதந்திரம் இல்லையே !

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை தான் !

நம்பிக்கைபாண்டியன் said...

கருத்துரைத்த அணைத்து நண்பர்களுக்கு நன்றிகள்!

குறிப்பாக ஹேமா உங்களுக்குதான், ஒரு பெண்ணாக இருந்தாலும் உங்கள் நேர்மையான அணுகு முறை போற்றத்தக்கது!

நம்பிக்கைபாண்டியன் said...

ஒரு நண்பர் மின்னஞ்சலில் \\\\ஏன் இப்படி பெண்களை குறை கூறுகிறீர்கள்/// என்று கேட்டிருந்தார்

(அவருக்கான பதில்)

நான் எழுதிய கவிதை பொறுமையாக படிக்கவும்! நான் பொதுவாக எல்லாரையும் குறை கூறவில்லை, அதில் தலைப்பிலேயே குறிப்பிட்டுள்ளேன் சில பெண்ணியவாதிகள் என்று, சில என்ற வார்த்தைக்கு குறைந்த அளவில் என்ற அர்த்தம் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்! இதனால்தான் கவிதைக்குள்ளும் பின்வரும் குறிப்பிலும் சில, பல என்ற வார்த்தைகளை வண்ணங்களால் வேறுபடுத்திக் காட்டியிருப்பேன்!

Yaathoramani.blogspot.com said...

அதிகம் அடக்கப்பட்டவர்கள் கொஞ்சம்
அதிகம் மீறுவதும் இயல்பானதே
அவர்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதே
அவர்களுக்கு நாம் தரும் பதிலாக இருக்க வேண்டும் என்பது
எனது எண்ணம
சொல்ல நினைத்ததை மிகச் சரியாகச் சொல்லிப் போகிறீர்கள்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Prem S said...

//ஆபாசமின்றிஆடை உடுத்தச் சொன்னால்ஆணாதிக்கம்//உண்மை உண்மை கவிதை அருமை