Wednesday, August 08, 2012

மழலை கவிதைகள் 2 - படக்கவிதை




இரவுநேர
இரயில் பயணத்திலும்
இயற்கையை 
ரசிக்க முடிகிறது!
எதிர் இருக்கை
குழந்தைகளால்!

*****************************

வராமல் 
சோறு ஊட்டும்
 பூச்சாண்டியும்...

வந்து
சோறு ஊட்டும் 
நிலாவும்...

காற்றிலேயே 
கவர்ந்து செல்கின்றனர்
குழந்தைகளின் முத்தங்களை!

*****************************

தூங்கும்பொழுது
சிரிக்கின்ற‌ குழந்தைகள்
கடவுளுடன் பேசுகின்றவாம்!
கபடமற்ற 
சிரிப்பிருக்கும் இடங்களில்
கடவுள் இருப்பது சாத்தியம்தான்!





16 comments:

கோவி said...

கவிதைகள் குழந்தையாய் அழகு.... அருமை..

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்து எழுதிய அழகு வரிகளை ரசித்தேன்...

தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

அருணா செல்வம் said...

உங்களின் எண்ணங்கள் எப்பொழுதுமே அழகானதாக இருக்கிறது சகோ.

Athisaya said...

குட்டிக்குட்டியாய் முத்துமுத்தாய் அழகுவரிகள்.வாழ்த்துக்கள்.!

MARI The Great said...

முதல் கவிதையில் தான் எத்தனை அர்த்தங்கள்.....

அருமையிலும் அருமை!

MARI The Great said...

மூன்றும் முத்துக்களே! செம செம!

”தளிர் சுரேஷ்” said...

முத்தான குழந்தைக்கவிதைகள்! பாராட்டுக்கள்!
இன்று என் தளத்தில்!
சென்ரியுவாய் திருக்குறள்
எம்புள்ளைய படிக்கவைங்க!
உடைகிறது தே.மு.தி.க
http://thalirssb.blogspot.in

இராஜராஜேஸ்வரி said...

அழகுப் படங்கள் --
அருமையான வரிகள்.. பாராட்டுக்கள்..

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

nic elines

Yaathoramani.blogspot.com said...

அழகான சிந்தனை
அருமையான கவிதைகள்
தொடர வாழ்த்துக்கள்

சிகரம் பாரதி said...

Alagaana kavidhaigal. Vaalththukkal ullame. Appadiye namma thalaththukkum konjam varalame?
http://newsigaram.blogspot.com

மகேந்திரன் said...

இனிய துளிப்பாக்கள்..
நெஞ்சில் நிலைத்தது..
மழலையின் இனிமை போல..

ஹேமா said...

குறிப்பிடமாட்டேன்.குழந்தைகள் போலவே சிரிக்கின்றன கவிதைகள்.கடவுளோடு பேசும் குழந்தைப்பருவம் மாறியதும் மனிதனாக மாறும்போதுதான் அவலம் !

மாலதி said...

வள்ளுவர் குரல் இனிது யாழ் இனிது என்பதர்தம் மக்கள் மழலை சொல் கேளாதவர் என்பர் உண்மையில் சிற்றிளம் குழந்தைகள் உலகத்தை மறக்க வக்ககூடியான

அம்பாளடியாள் said...

சிறப்பான கவிதை வரிகள் .தொடர வாழ்த்துக்கள் .

அ. வேல்முருகன் said...

மழழையை ரசித்த ரசிகனுக்கு
மனதார வாழ்த்துக்கள்

அதென்ன இருப்பதற்கு
இல்லாத பெயர் சூட்டுதல்