Friday, October 28, 2011

வினை - சவால் சிறுகதை-2011


                                                             காவல்துறை உயரதிகரிகளின் முக்கிய கலந்தாய்வில் இருந்த எஸ்,பி.கோகுல்ராமின் கையில் இன்பார்மர் விஷ்னு அனுப்பிய கடிதம் கொடுக்கப்பட்டதும் மிகவும் பரபரப்பாக இருந்தார்.
விஷ்னு சென்னையின் மாநகர பகுதியில் உள்ள
ஒரு தனியார் டிடெக்டிவ் ஏஜென்சியின் உரிமையாளர்  தயாளனுக்கு உதவியாளராக புதிதாக பணிக்கு சேர்ந்துள்ளவன், ஒருவரை பின் தொடந்து உளவு பார்த்து அவர்கள் பற்றிய தகவல்களை திரட்டி அனுப்புவதே அவர்களின் பணி, பல்வேறு காரணங்களுக்க்காக இந்த பணியை பலருக்கு செய்தாலும்
காவல்துறைக்காகவும் சில முக்கிய வழக்குகளில் உதவுவார்கள்,

                                                          உளவுத்துறை சமீபத்தில் "வெளிநாட்டு தீவிரவாதிகளின் புதிய திட்டத்தின் படி ஒரே ஒரு தீவிரவாதி மட்டும் நட்டிற்குள் வந்து இங்கிருக்கும் உள்ளூர் நபர் மூலமாக தங்கள் திட்டத்தை நிறைவேற்றிவிடுவார்கள், என தகவல் அனுப்பியிருந்தது. அதை உறுதிப்படுத்துவது போல் சில நாட்களுக்கு முன் சென்னை புறநகர் பகுதியில்
தேர்தலில் பணபரிமற்றத்தினை தடுக்க நடந்த வாகன சோதனையின் போது, பெரும் பணத்துடன் பிடிபட்டவன் வெளிநாட்டினை சேர்ந்த தீவிரவாதி கசாப் என்று தெரிந்தது,  இதன் ரகசிய விசாரணையின் போதுதான் தயாளனின் டிடெக்டிவ் ஏஜென்சியின் உதவியையும் நாடினார் எஸ்.பி.கோகுல் , அவர் தந்த சில தகவலின் படி விஷ்னுவும் தயாளனும் விசாரிக்க தொடங்கினர்,
இந்த சூழ்நிலையில் விஷ்ணு அனுப்பிய கடிதத்தில்

Mr.கோகுல்
S W H2 6F இதுதான் குறியீடு கவனம்.
விஷ்ணு
என்று அந்த குறிப்பிடப்பட்டிருந்தது, இதை பல விதங்களில் யோசித்துபார்த்தும் அந்த குறியீட்டின் அர்த்தம் புரியவில்லை, விஷ்னுவின் செல்பேசி எண்ணுக்கு அழைத்தாலும் அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது,நேராக அருகில் இருந்த தயாளனின் அலுவலகத்திற்கு செல்லுமாறு தன் டிரைவருக்கு உத்தரவிட்டார்,
அலுவலகத்திற்கு சென்றதும் அங்கு செக்யூரிட்டி மட்டும் இருந்தார், தயாளனுக்கு "எங்கு இருக்கிறீர்கள்" என போன் செய்தால்
 " அலுவலகத்திற்குதான் வந்து கொண்டிருக்கிறேன் அங்கு இருங்கள் பத்து நிமிடங்களில் வந்துவிடுகிறேன்" என்றார்.

அலுவலகத்தில் தயாளனின் அறைக்குள் சென்ற எஸ்.பி.கோகுல் மின்விசிறியை சுழலவிட்டு இருக்கையில் அமர்ந்து, சுற்றும் முற்றும் பார்த்தபோது மேசையின் மீதிருந்த டைரியினுள் கவர் ஒன்று இருந்தது! அதை பிரித்து படித்த போது அந்த கடிதத்தில்

Sir
எஸ்.பி.கோகுலிடம் தவறான குறியீட்டைதான் கொடுத்திருக்கிறேன் கவலை வேண்டாம்.
-விஷ்ணு
என்று குறிப்பிடப்பட்டிருந்தது,தனக்கு விஷ்ணு அனுப்பிய கடித்தையும் எடுத்து இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தார்,  ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட பிரிண்ட் போல் தோன்றியது, விஷ்ணு ஏன்தவறான தகவல் கொடுத்தான், தாயாளன் ஏன் அப்படி கொடுக்க சொன்னார். அப்படியானால் இவர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் ஏதோ தொடர்பிருக்கிறதா என கோகுல் மேலும் குழப்பமடைந்தார்,. அந்த நேரத்தில் அவர் செல்பேசி ஒலித்தது, எடுத்து பார்த்தால் இன்பார்மர் விஷ்ணு ,அழைப்பை ஏற்றதும்   கோபமாக "ஏன் போனை அணைத்து வைத்திருந்தாய் என்றார் கோபமாக,
                                                                    எதிர் முனையில் விஷ்ணு " சார் மன்னிக்கவும் ஒரு கையில் வாகனம் ஓட்டிகொண்டே தயாளன் சாரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது எனது போன் கீழே விழுந்து ரிப்பேராகிவிட்டது அதனால் இரண்டு மணி நேரமாக என்னால் யாருடனும் பேசமுடியவில்லை, யாருடைய போன் நம்பரும் எனக்கு நினைவில் இல்லை அனைத்தும் சிம் கார்டில்தான் உள்ளது ,அதனால் தான் எனக்கு கிடைத்த தகவலை உடனடியாக தெரிவிக்க முடியவில்லை,   விரைவாக தெரிவிப்பதற்காகவே என்னுடைய உயிர் நண்பன் ராகவனுடைய போன் நம்பர் நினைவில் இருப்பதாலும், அவன் உங்கள் அலுவலகத்திற்கு அருகில் இருப்பதாலும் அவனிடம் கடிதம் மூலம் தகவலை தெரிவிக்க சொன்னேன் இப்பொழுது கூட என்னுடைய சிம்கார்டை இன்னொரு நண்பரின் போனில் பொருத்தி பேசுகிறேன், நான் அனுப்பிய குறியீடு கிடைத்ததா சார்" என்றான். மறு முனையில் கோகுல் அதே கோபத்துடன் "நீயும் தயாளனும் என்னிடம் எதையோ மறைக்கிறீர்கள், எதற்காக எனக்கு தவறான தகவலை கொடுத்ததாக தயாளனுக்கும் கடிதம் அனுப்பியிருக்கிறாய்? உண்மையை சொல்!" என்றார் கோகுல்,

"அதை பார்த்துட்டீங்களா சாரி சார், நான் உங்களுக்கு அனுப்பிய குறிப்பு  உண்மைதான்,அந்த குறிப்பின் அர்த்தம் SW means Street name Wamanan  H2 means House number 2
6F means Six Face, அதாவது நீங்கள் தீவிரவாதியை பிடித்த அதே பகுதியில் உள்ள வாமணன்  தெருவில் 2ம் எண் வீட்டில் உள்ள ஆறுமுகம் என்பவனுக்கும் பிடிபட்ட அந்த தீவீரவாதி கசாப்பிற்கும் ஏதோ தொடர்பு இருந்திருக்கிறது! உங்களிடம் விரிவாக சொல்லச் சொல்லி நண்பனிடம் சொன்னேன் நீங்கள் முக்கியமான மீட்டிங்கில் இருப்பதாக சொல்லி அனுமதி மறுத்துவிட்டனர்.                    நான் இங்கு வந்தபோது அந்த ஆறுமுகம் தங்கியிருந்த வீடு நமது தயாளன் சாருடைய மாமனாருக்கு சொந்தமானது என்றும் , அவனை பற்றி எதுவும் தெரியாமல் கூடுதல் வாடகைக்கு ஆசைப்பட்டு வீட்டை வாடகைக்கு கொடுத்துள்ளனர், யாரோ, யாரையோ கொல்வதற்கு தெரியாமல் உதவும் கொசுறு வேலைக்கு கூட தூக்கு தண்டனை கொடுக்கும் சூழல் இங்கு நிலவுவதால் அவர்களுக்கு ஏதாவது ஆகி, அதனால் தன் மனைவியின் கோபத்தில் தன் குடும்ப வாழ்க்கை பாதிக்கும் என நினைத்து தங்கியிருக்கும் இடத்தை மட்டும் சொல்லவேண்டாம் என்றார், அதற்குள் போன் கீழே விழுந்துவிட்டதால், காப்பாற்ற நீங்கள் இருக்கும் தைரியத்தில் அவரின் தற்காலிக ஆறுதலுக்கு அப்படி ஒரு கடிதத்தை
அதே நண்பனின் மூலம் அனுப்பினேன்! நான் சொன்ன தகவல் முற்றிலும் உண்மை! நான் இப்போது அங்குதான் அருகிலிருப்பவர்களிடம் விசாரித்துகொண்டிருக்கிறேன் உடனே வாருங்கள்" என்றான் விஷ்ணு, குழப்பம் நீங்கினார் எஸ்,பி.கோகுல்.

தீவிரவாதிக்கு உதவிய ஆறுமுகம் இருந்த வீட்டை எஸ்,பி.கோகுல் தலைமையிலான காவல்படை சூழ்ந்தது, வீட்டருகே இஸ்திரி செய்பவரிடம் விசாரித்ததில் ஒரு மணி நேரத்திற்கு முன்பு அந்த பையன் முதுகில் காலேஜ் பேக் ஒன்றுடன் பைக்கில் புறப்பட்டு சென்றதாக கூறினார் என்று விஷ்ணு தகவல் சொன்னான். பூட்டியிருந்த வீட்டை உடைத்து   உள்ளே சென்றால் அங்கு ஒரு பையில் சில லட்சங்கள் மதிப்புள்ள பணமும்
 ஒரு சில ஆடைகளும் சில சமையல் பாத்திரங்களும் பட்டுமே இருந்தது அறை மிழுவதும் தேடியும் எந்த தடயமும் காணப்படவில்லை, எஸ்,பி.கோகுல்ராம் அங்கிருந்த ஆடைகளின் சட்டைப்பை மற்றும் பேண்ட்பைகளில்
 கைகளை விட்டு தேடி பார்த்தார் இரு சிறு காகிதம் இருந்தது அதில் "அன்றைய தேதி , தியேட்டர், ரயில்வே ஸ்டேசன் ,பஸ்டாண்டு, மார்க்கெட்,என்று குறிப்பிடப்பட்டிருந்தது,  எங்கோ வெடி குண்டு வெடிக்க சதி செய்துள்ளார் என்ற உண்மை புரிந்ததும் உடனடியாக அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சோதனையிட உத்தரவிடப்பட்டது,

                                               அதே நேரத்தில் ஆறுமுகம் கிடத்த சில லட்சங்களையும் காரியம் முடித்தபின் கிடைக்க போகும் பல லட்சங்களையும் நினைத்து இனி இப்போது செய்வது போல் சிறு சிறு திருட்டு கும்பலுடன் சேர்ந்து கொள்ளையடிப்பது, கூலிக்கு அடியாளாக வேலைக்கு செல்வது போன்ற வேலைகளை செய்யாமல் இது போன்ற பெரிய காரியங்கள் சிலவற்றை செய்து வாழ்க்கையில் பெரிய அளவில் செட்டிலாகிவிட வேண்டுமென்று எண்ணி உற்சாகமாக பைக்கை விரட்டினான்! வெடிகுண்டு வெடிப்பதற்கு இன்னும் ஒரு மணி நேரம்தான் இருக்கிறது , பத்து நிமிடத்தில் மார்க்கெட் போய்விடலாம்  அங்கு தன் முதுகிலிருக்கும் வெடிகுண்டு பையை ஒரு ஓரமாக வைத்து வந்துவிட்டால் வேலை முடிந்தது,

                                              அதிக மக்கள் கூடும் காய்கனி மார்க்கெட்டை நெருங்கிக் கொண்டிருக்கையில் அவனை மறித்து பெரிய சுமோ வேன் ஒன்று நின்றது, கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் உள்ளே இழுக்கப்பட்டு அதன் கதவுகள் சாத்தப்பட்டன, வேன் ஆட்களற்ற புறநகர் பகுதியை நோக்கி திரும்பியது. உள்ளே  இருந்த விஜயாவின் அப்பா, அண்னன், அவனது நண்பர்களை பார்ததும் அதிர்ச்சியடைந்தான் ஆறுமுகம், மற்றவர்கள் பிடித்துகொள்ள விஜயாவின் அண்னன் அவன் முகத்தில் எட்டி உதைத்து "ஏண்டா திருட்டுநாயே, உன்ன நல்லவன்னு நம்புன என் தங்கச்சிய காதலிக்கிறதா சொல்லி நெருங்கி பழகிட்டு , அவள் கர்பமானதும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு ஏமாத்திட்டு ஊரைவிட்டு ஓடி வந்துட்ட,  அவ அவமானத்துல தற்கொலை பண்ணிக்கிட்டா தெரியுமா, உன்ன தேடிட்டு இருந்தோம், நீ இங்க இருக்குறதா நேத்துதான் தகவல் கிடைச்சது, அவ சாவுக்கு காரணமான நீ இந்த உலகத்துலேயே இருக்க கூடாதுடா" என்று கோபமாக கூறிய படியே அவன் வயிற்றில் முதல் கத்தியை இறக்கினான். அடுத்த சில நொடிகளில் மேலும் சில கத்திகள் இறங்க தன் தவறுகள் அனைத்தும் நினைவில் தெரிய உயிரற்ற உடலாய் சரிந்தான் ஆறுமுகம், கண்ணுக்கெட்டும் தூரம்வரை  கட்டிடமோ, ஆட்களோ யாருமில்லாத   புற நகரின் ஒதுக்குபுற பகுதியில் அவனது உடலை முதுகில் தொங்கிய பையுடனே வீசிவிட்டு சென்றார்கள். அவர்கள் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் ஆறுமுகத்தின் உடலும் தீவிரவாதிகளின் திட்டமும் வெடித்து சிதறிக்கொண்டிருந்தன.

(குறிப்பு:- யுடான்ஸ் நடத்தும் சவால் சிறுகதை போட்டிக்கு எழுதியது)

22 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

பாராட்டுக்கள். போட்டியில் வென்று பரிசு பெற வாழ்த்துக்கள். vgk

ஷைலஜா said...

வெற்றிக்கு வாழ்த்து! கதை நன்றாக உள்ளது

Thenammai Lakshmanan said...

கதை நன்றாக உள்ளது. போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

கதைக்கு பாராட்டுக்கள்.

போட்டியில் வென்று பரிசு பெற வாழ்த்துக்கள்.

SURYAJEEVA said...

அருமை, வாமணன் மட்டும் இடிக்கும் என்று நினைக்கிறேன்...

KUTTI said...

story is nice... all the best...

Asiya Omar said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒரு படம் பார்த்து முடிச்ச ஃபீலிங், நல்லாருக்கு, வாழ்த்துக்கள்

ADMIN said...

நல்ல கதை.. பாராட்டுகள்..!! போட்டியில் வென்றுவிடுவீர்கள்..!!

எனது வலையில் இன்று:

தமிழ்நாடு உருவான வரலாறு

தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகள் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

Madhavan Srinivasagopalan said...

// யாரோ, யாரையோ கொல்வதற்கு தெரியாமல் உதவும் கொசுறு வேலைக்கு கூட தூக்கு தண்டனை கொடுக்கும் சூழல் இங்கு நிலவுவதால் //

These lines are unwaranted. It's the responsibility of the every citizen not to support even indirectly any crime. Every house owner should take responsibility to have tenant with proper integrity.. otherwise he has to face the consequence as per the law.

ADMIN said...

உங்களை பின்தொடர்ந்திருக்கிறேன்.. எனக்கு மகிழ்ச்சி? உங்களுக்கு?

நம்பிக்கைபாண்டியன் said...

வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி!

நம்பிக்கைபாண்டியன் said...

suryajeeva said...
அருமை, வாமணன் மட்டும் இடிக்கும் என்று நினைக்கிறேன்...

ஆமாங்க, w ல் ஆரம்பிக்கும் தமிழ் பெயர்கள் தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை இது தான் ஓரளவிற்கு பொருத்தமானதாக இருந்தது.

நம்பிக்கைபாண்டியன் said...

Madhavan Srinivasagopalan said.
// யாரோ, யாரையோ கொல்வதற்கு தெரியாமல் உதவும் கொசுறு வேலைக்கு கூட தூக்கு தண்டனை கொடுக்கும் சூழல் இங்கு நிலவுவதால் //

These lines are unwaranted. It's the responsibility of the every citizen not to support even indirectly any crime. Every house owner should take responsibility to have tenant with proper integrity.. otherwise he has to face the consequence as per the law.


எதற்கு செய்கிறோம் என்று தெரியாமலே செய்யும் சிறு உதவி தவறான விளைவுகளை ஏற்படுத்தினால், யாராக இருந்தாலும் சட்டத்திற்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும்,அத்ற்கு தகுந்த தண்டனை அனுபவித்தே ஆக என்பதை நானும் ஏற்கிறேன், ஆனால் "எதற்கு செய்கிறோம் என்று தெரியாமலே செய்யும் சிறு உதவிக்கு தகுந்த தண்டனை தூக்கு என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை!

இந்த கதையில் கதாபாத்திரத்தின் பார்வையில் இங்கு இருக்கும் சூழல் என்றுதான் சொல்லியிருக்கிறேனே தவிர, அதை கண்டிக்கவோ நியாயப்படுத்தவோ இல்லை!

எனவே இதில் எதுவும் தவறு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை!
தங்கள் கருத்துக்கு நன்றி

pichaikaaran said...

"இந்த கதையில் கதாபாத்திரத்தின் பார்வையில் இங்கு இருக்கும் சூழல் என்றுதான் சொல்லியிருக்கிறேனே தவிர, அதை கண்டிக்கவோ நியாயப்படுத்தவோ இல்லை!"

உண்மை.. கதாபாத்திரங்களின் கருத்தை கதாசிசிரியரின் கருத்தாக கருத கூடாது.

கதை அருமை

pichaikaaran said...

"இந்த கதையில் கதாபாத்திரத்தின் பார்வையில் இங்கு இருக்கும் சூழல் என்றுதான் சொல்லியிருக்கிறேனே தவிர, அதை கண்டிக்கவோ நியாயப்படுத்தவோ இல்லை!"

உண்மை.. கதாபாத்திரங்களின் கருத்தை கதாசிசிரியரின் கருத்தாக கருத கூடாது.

கதை அருமை

நவநீதன் said...

கதை super. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் :)

சாகம்பரி said...

முன்வினை பின்வினையை தடுத்து விட்டது. நல்ல கதையமைப்பு. வெற்றிபெற வாழ்த்துக்கள்.

சாகம்பரி said...

உடான்ஸ்க்காக ஒரு ஓட்டுபட்டை இருக்குமே. காணவில்லையே.

நம்பிக்கைபாண்டியன் said...

படித்த அனைவருக்கும் நன்றிகள்!

சாகம்பரி said...
உடான்ஸ்க்காக ஒரு ஓட்டுபட்டை இருக்குமே. காணவில்லையே.

எனக்கு தெரிந்தவரை முயற்சித்தேன் கொண்டுவர முடியவில்லை! எப்படினு முழுசா புரியல,

Radhakrishnan said...

மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது. அருமை. வாழ்த்துகள்.

bigilu said...

வாழ்த்துக்கள்...