Monday, June 25, 2012

கவிதைகளாகவும் இருக்கலாம் 4 - கவிதைகள்


சர்க்கரை வியாதி
அன்று
குழந்தையில்
இனிப்பு
அதிகம் சாப்பிடாதே! என
அம்மா
அன்புடன் சொன்னபோது
கேட்காத மனம்!

இன்று
முதுமையில்
இனிப்பை
தொட்டுகூட பார்ககாதிங்க! என‌
மருத்துவர் மிரட்டி
சொல்லும்போது கேட்கிறது!


*******************************



பழிக்குப்பழி!
அன்பளிப்பாக கிடைத்த‌
அரிய புத்த‌கமொன்று
கடித்து சிதைக்கப்பட்டிருந்தது
என் வீட்டு எலிகளால்!
கொலைவெறி கோபத்தில்
வீடெங்கும் தேடியதில்
கிடைத்ததென்னவோ
புதிதாய் பிறந்த 
சில கண்திறவா குட்டிகள்தான்!


வீதியில் எடுத்தெறிந்ததும்
தூக்கிச்சென்றன சில காகங்கள்
எலிகளின் எண்ணிக்கையை
குறைத்துவிட்டதாக எண்ணி
கோபம் தணிந்தேன்!
அடுத்த சில நாட்களில்
கடித்து குதறப்பட்டிருந்தன‌
அம்மாவின் 
விலை உயர்ந்த 
பட்டுப்புடவைகள்!

*******************************

9 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

இரண்டும் நல்லாவே இருக்கு.

கவிதை என்றே எடுத்துக்கொள்ளலாம்.

பாராட்டுக்கள்.

MARI The Great said...

இரண்டும் ரசித்து வியக்க வைத்தது.!

சசிகலா said...

யதார்த்தமான வரிகள் மிகவும் அருமை .

அம்பாளடியாள் said...

உண்மையை ஒரு அழகிய கவிதை உருவில் வெளிக்காட்டியுள்ளீர்கள்
அருமை!....வாழ்த்துக்கள் மென்மேலும் கவிதைகள் தொடர.

நம்பிக்கைபாண்டியன் said...

வை.கோபாலகிருஷ்ணன்
வரலாற்று சுவடுகள்
Sasi Kala
அம்பாளடியாள்,


ரசித்த உள்ளங்களுக்கு நன்றிகள்!

”தளிர் சுரேஷ்” said...

சிந்திக்க தூண்டும் சிந்தனை வரிகள்! பாராட்டுக்கள்! விகடன் வலையோசையில் இடம் பெற்றமைக்கும் வாழ்த்துக்கள்!

Seeni said...

arumai!

நம்பிக்கைபாண்டியன் said...

நன்றி சுரேஷ் & சீனி

Dinesh Kumar A P said...

Kavithai than ithu.......தமிழ் காதல்கவிதைகள்