Monday, June 18, 2012

உன் ரசிகன் - காதல் கவிதைகள்


 யார் நீ?

தூரத்தில் இருக்கும்
சூரியன்தான்
நட்சத்திரமாம்!
அருகில் இருக்கும்
நட்சத்திரம்தான்
சூரியானாம்!

உருவத்தால்
எனக்கு
தூரத்திலிருந்தாலும்
உள்ளத்தால்
என்
அருகிலிருக்கும் நீ,
சூரியனா? நட்சத்திரமா?

வேகத்தடை!
விரைந்து செல்லும்
என்
வாகனத்திற்கு!
சாலைக்கு வெளியே
ஒரு வேகத்தடையாய்,
உன்
பெயர் கொண்ட‌
கடையொன்றின்
விளம்பர பலகை!


ரசிகன்
அம்மன் கோவில்
நாய்க்குட்டி
சூரிய உதயம்
மலர்ந்த பூக்கள்
குறுக்கெழுத்துப்போட்டி
குழந்தைகளின் முத்தம்
குட்டி கவிதைகள்!
ஜோடிப் பறவைகள்!
தன்னம்பிக்கை புத்தகங்கள்
வெனிலா ஐஸ்கிரீம்
வண்ணக் கோலங்கள்
வாழ்த்துஅட்டை சேகரிப்பு
மொட்டைமாடி நட்சத்திரங்கள்
நிலா வெளிச்சத்தில் உணவு!

மழைபெய்து முடித்த‌தும்
மாச‌ற்ற‌ காற்று!
அழுது தீர்த்த‌தும்
அமைதியாகும் ம‌ன‌சு!
இமைமூடி ர‌சிக்கும்
இர‌வுநேர 
மெல்லிசைப்பாட‌ல்க‌ள்!" என‌
உன‌க்கு பிடித்த‌
எல்லாவ‌ற்றையும்
ர‌சிக்க‌த் தொட‌ங்கிவிட்டேன்!
உன்னை என‌க்கு
பிடித்த‌ நாளிலிருந்து!

4 comments:

MARI The Great said...

மூன்றுமே அருமையான கவிதை., இதைத்தவிர ஒன்றும் சொல்ல தெரியாமல் வியந்து ரசிக்கிறேன்..!

சசிகலா said...

வேகத்தடை வரிகள் வேகமா மனசுல நுழைந்தது .

சித்திரவீதிக்காரன் said...

அருமையான கவிதைகள். விகடன் வலையோசையில் தங்கள் பதிவைப் பார்த்தேன், ரசித்தேன். வாழ்த்துகள்.
- அன்புடன், சித்திரவீதிக்காரன்.

நம்பிக்கைபாண்டியன் said...

வரலாற்று சுவடுகள்
Sasi Kala
சித்திரவீதிக்காரன்,
உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்!