Wednesday, October 12, 2011

நகர்வலம்! - கவிதை


நாளைய திருவிழவிற்கு வந்த
கம்பீர யானையொன்று
இன்றே நகர்வலம் வந்தது
பாகனின் வருவாய்க்காக!

தெருவில் நுழைந்ததும்
"ஐ! யானை"என்று
யானையை நோக்கி
உற்சாகமாய் ஓடினர் சிறுவர்கள்!

"ஐ! யானை"என்று
அதே உற்சாகத்தோடு
வீட்டை நோக்கி ஓடினார்
எதிர்வீட்டு தாத்தா,

யானையை பார்த்த
குழந்தைகளின் உற்சாகம்
இயல்பானது!
தாத்தாவின் உற்சாகம்
சற்றே விநோதமானது!

விநோதத்தின் விடையாய்
கையில் பேத்தியுடன்
சிரித்து வந்த
தாத்தாவை நோக்கி
உற்சாகமாக வந்துகொண்டிருந்தது யானை!

9 comments:

மாலதி said...

உள்ளே பூடகமாக கருத்துகளுடன் சொல்லியிருபதுபோல தெரிகிறது . ஒருநல்ல ஆக்கமாக படுகிறதுஅழக தெரிகிறது ஆக நாம் பாராட்டத் தயங்ககூடாது என உள்மனது கூறுகிறது பாராட்டுகள் தொடர்க ....

Yaathoramani.blogspot.com said...

மீண்டும் குழந்தையான தாத்தாவை
மிக அழகாக சொல்லிப் போகும் உங்கள் படைப்பு அருமை
தொடர வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

விநோதத்தின் விடையாய்
கையில் பேத்தியுடன்
சிரித்து வந்த
தாத்தா

அழகான பகிர்வு,பாராட்டுக்கள்.

சாகம்பரி said...

குழந்தைகளுக்காக ஆர்வப்படும் சில சமயத்தில் இப்படித்தான் ஆகிவிடுகிறது. தெருவில் ஐஸ் வண்டி செல்லும்போது, பலூன்காரர் செல்லும்போதும் நகைப்பிற்கு ஆளாகிவிடுகிறோம். கவிதை அழகு.

சீனுவாசன்.கு said...

நம்ம சைட்டுக்கும் வாங்க!நல்லா பழகுவோம்!

நம்பிக்கைபாண்டியன் said...

பாராட்டி கருத்து தெரிவித்த அத்தனை உள்ளங்களுக்கும் என் நன்றிகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தன் பேத்திக்கு யானையைக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் தாத்தாவும் ஒரு குழந்தயின் உற்சாகத்துடன் .. ஆஹா .. அருமை. பாராட்டுக்கள்.

vimalanperali said...

கவிதைகளும்,படங்களும் நல்ல படப்பிடிப்பு.வாழ்த்துக்கள் சார்.

சிவகுமாரன் said...

கவிதையாய் ஒரு சிறுகதை
அருமை அருமை.