1) மேகங்களில்
பொம்மை செய்து
விளையாடும் குழந்தை
காற்று!
******
2) காற்றில் கரையும்
பலவண்ண கற்பூரம்
வானவில்!
******
3) கீழ்நோக்கி வளரும்
மழையின் வேர்கள்
வானத்தில் இருக்கிறது
மின்னலாக!
******
4) பதினெட்டு பட்டிக்கும்
ஒரே ஸ்பீக்கர்
இடி!
நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
11 comments:
இயற்கையை ஒட்டிய அருமையான கவிதைகள்
எல்லாமே நல்ல நல்ல குட்டிச் சிந்தனைகள்.அதுவும் கடைசி சிரிக்கவே வைத்துவிட்டது !
அருமையான ஹைக்கூ கவிதைகள்
படங்களுடன் பதிவு அருமை
தொடர வாழ்த்துக்கள்
@@ பதினெட்டு பட்டிக்கும்
ஒரே ஸ்பீக்கர்
இடி!@@
என்ன அருமையான கற்பனை..அருமை.வாழ்த்துக்களோடு என் நன்றிகள்.
சைக்கோ திரை விமர்சனம்..
ஹைக்கூ கவிதைகள் அருமை...கடைசி -:)
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...
படங்களுடன் பதிவு அருமை
இடி கவிதை சூப்பர் கவிதைகளுக்கேற்றா படங்களும் வெகு அருமை
ரசித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்!
இடி கவிதைக்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி!
அருமையானக் கவிதைகள்...
நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
நன்றி
யாழ் மஞ்சு
வலைச்சரம் வாயிலாக கவிகளை வாசிக்க வந்தேன் ...!!!
அழகான ஹைகூக்கள் ...
Photos too ..!!!
தொடர வாழ்த்துக்கள் ...!!!
Post a Comment