Friday, February 24, 2012

அனுமதியற்றவர்கள் - கவிதை

எறும்பு எலி,
பாம்பு  பூரான்
தெருநாய், என
தன் அனுமதியின்றி
வீட்டிற்குள் நுழையும்
எந்த  ஒரு உயிரையும்
அடித்து விரட்டியோ, கொன்றோ
வெளியேற்றுகிறான் மனிதன்!

காடுகளை அழித்து
வயல்களை நகராக்கி
குடியேறும் மனிதர்களை
என்ன செய்வதென்று தெரியாமல்
விழித்துக்கொண்டிருக்கின்றன
விலங்குகளும் பறவைகளும் !


9 comments:

Anonymous said...

Nice

Marc said...

அருமைக்கவிதை வாழ்த்துகள்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

விலங்கினங்களை கூட திருத்திவிடலாம்...

மனிதர்களை முடியாது நண்பரே....

இந்த உலம் அழியும் வரை மனிதர்கள் இதைதான் செய்துகொண்டிருப்பார்கள்..

தீபிகா(Theepika) said...

ஆறறிவுகளின் அடாவடித்தனங்கள் பற்றிய யதார்தத்தை குறுங்கவிதையொன்றில் வைத்த அழகு சிறப்பு.

ஹேமா said...

யோசிச்சிடே இருக்கவேண்டியதுதான்.நாகரீகம்,விஞ்ஞானம்ன்னு சொல்லிட்டு அழிஞ்சிட்டே இருக்கோம் !

நம்பிக்கைபாண்டியன் said...

Unknown
DhanaSekaran .S
சௌந்தர்
தீபிகா
ஹேமா!
இயற்கையை நேசிக்கும் தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல கருத்தினை வலியுறுத்திக் கூறியுள்ளீர்கள்.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.


இதே கருத்தினை வலியிறுத்தி நான் சமீபத்தில் ஓர் படப்பதிவு வெளியிட்டுள்ளேன்.

இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2012/02/blog-post_29.html

02.03.2012 வலைச்சரத்தில் கூட அறிமுகமாகியுள்ளது.

Yaathoramani.blogspot.com said...

மாறுபட்ட அருமையான சிந்தனை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

நம்பிக்கைபாண்டியன் said...

கருத்துக்களுக்கு நன்றி,கோபாலகிருஷ்ணன் & ரமணி சார்ஸ்