Wednesday, February 01, 2012

தாய்மொழி - கவிதை

நேற்றைய பயணத்தின்
கூட்ட நெரிசலில்
காலை மிதித்துவிட்டு
"SORRY" என்றவனிடம்
சண்டையிட்டு வந்த நான்!

இன்றைய பயணத்தின்
கூட்ட நெரிசலில்
காலை மிதித்துவிட்டு
"மன்னிச்சுடுங்க " என்றவனிடம்
புன்னகைத்தபடி வருகிறேன்!
வார்த்தைளின்  வலிமை
மொழியில் இருக்கிறது‍...!

3 comments:

பாலா said...

எதார்த்தம். மன்னிச்சுடுங்க என்று கேட்கும்போது இயல்பாகவே அதில் பணிவு இருப்பது போல தோன்றுகிறது. அருமையான கவிதை.

sasikala said...

தமிழுக்கே உரிய தங்கமான குணம் அருமைங்க

நம்பிக்கைபாண்டியன் said...

கருத்துக்களுக்கு நன்றி, பாலா, சசிகலா.