Wednesday, February 15, 2012

மரண குறிப்புகள்! - கவிதை

என்மரணம்
நிகழந்தது தெரிந்ததும்,
எனைப்பற்றி
ஒவ்வொருவரும்
பேசிக்கொண்டிருந்ததையெல்லாம்
குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார் கடவுள்!
எனக்கான இடம்
சொர்கத்திலா? நரகத்திலா?
என்பதை தீர்மானிக்க!




                     

8 comments:

Marc said...

அருமைக்கவிதை வாழ்த்துகள்

மகேந்திரன் said...

கணக்குப்பார்த்துக் கொடுக்கப்படும்
காசோலைப் பரிசு...

சசிகலா said...

மரணத்திற்கு பிறகு இப்படிதான் இருக்குமோ ?
அருமையான பகிர்வு .

முனைவர் இரா.குணசீலன் said...

அருமை அன்பரே.

நயமாகச் சொன்னீர்கள்..

சிந்திக்கும்விதமாகச் சொன்னீர்கள்..

எத்தனை எத்தனை நீதிமன்றங்களும் காவல் நிலையங்களும் இருந்தாலும் இப்படியொரு நம்பிக்கையிருப்பது தேவைதான்..

அப்படியாவது திருந்துவார்கள் என்றுதான் சமயங்களும் இப்படி நம்பிக்கைகளை விதைத்திருக்கவேண்டும்..

ஹேமா said...

கொஞ்சம் பயப்படுத்துது கவிதை !

மாலதி said...

அருமைக்கவிதைஅருமையான பகிர்வு

ராஜி said...

இறந்த பின் சொர்க்கம் நரகம் என்பது நிஜம்ன்னு சொல்றீங்களா?

நம்பிக்கைபாண்டியன் said...

தனசேகர்
மகேந்திரன்
sasikala
guna
ஹேமா
மாலதி
ராஜி

கவிதையை படித்து கருத்துக்களை பகிர்ந்ததற்கு நன்றி!

///ராஜி said...

இறந்த பின் சொர்க்கம் நரகம் என்பது நிஜம்ன்னு சொல்றீங்களா?///

நாம் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருக்கிறோம் என்பதை நம் மரணத்தின் போது ஒவ்வொருவரும் பேசிக்கொள்வதை வைத்தே தோராயமாக கணித்துவிடலாம்!

சொர்க்கம் நரகம் என்பது இருக்கலாம், இல்லாமலும் போகலாம், ஒரு வேளை இருப்பின், அங்கு செல்ல நம் வாழும் வாழ்க்கை முறையே அடிப்படை தகுதியாக இருக்கும்!